கர்ப்போட்டம் குறிப்பு மற்றும் கணிப்புக்காக உருவாக்கப்பட்ட தளம் sidhariyal.org
சித்தர் இயல் நாட்காட்டி
12,600 ஆண்டுகளுக்கு முன்பு வரை நாம் நிலா காலண்டர் (காலந்தெறி) பயன்படுத்திக் கொண்டு இருந்தோம்.
முதலாம் நீருழியில் குமரிக்கண்டம் மூழ்கிய போது, பெரும்பான்மையோர் காவடியில் எதை எடுக்க முடியுமோ அதை எடுத்துக்கொண்டு, கால்நடைகளுடன் நடந்தே இலங்கை வந்தார்கள். உணவுக்காக வேளாண்மை செய்ய ஆரம்பித்த போது, சூரிய நாட்காட்டி உருவாக்கப்பட்டது. சூரிய நாட்காட்டியில் சூரியனின் நகர்வு தெரியாது. எனவே, ஆதி ஓரையைக் கணக்கில் கொண்டு, தென் கதிர் திருப்ப நாளில் ஆதி ஓரை காலை 5:30 மணிக்குக் கிழக்குத் தொடுவானில் எழுந்த பொழுது சித்திரை-1 என முருகனால், சூரியனின் நகர்வு அறிய, முதல் சித்தரியல் நாட்காட்டி உருவாக்கப்பட்டது. அந்த சித்தர் ஓரை இப்பொழுது தென் கதிர் திருப்ப நாளில் மாலை நேரம் 6:00 மணிக்கு உதிக்கிறது. 180 திகிரி சூரியன் நகர்ந்து விட்டதால் இந்த நிகழ்வு. இதை இரண்டாம் ஊழிக்குப் (பூம்புகார் கடலில் மூழ்கியது), பிறகு தமிழ் சித்தர்கள் சித்தர் ஓரையை மையமாகக் கொண்டு நாட்காட்டி இருந்தால் மாதங்கள் தப்புகின்றது என 4000 ஆண்டுகளுக்கு முன்னால், திருச்சியை தலைநகராகக் கொண்டு ஆண்டவர் திருமாலால், சித்தரியல் நாட்காட்டி திருத்தப்பட்டது.
அப்பொழுது சமநாளில் முருகனுக்கு உகந்த கார்த்திகை நட்சத்திரம் வானில் எழுந்தது. அதை ஆரம்பப் புள்ளியாக வைத்து திருமாலால் ராசிகள் உருவாக்கி பஞ்சாங்கம் உருவாக்கப்பட்டது. எனவே, சமநாளில் சித்திரை-1 என சூரிய நகர்வின் அடிப்படையில் ஒவ்வொரு 60 சுழல் ஆண்டுக்கும் ஒரு கரணம் என்றும், அந்த 60 ஆண்டுகள் 27 யோகம் என ஒவ்வொரு 800 நாட்களை ஒரு யோகமாக்கினார். கார்த்திகை நட்சத்திரத்தை ஆரம்பப் புள்ளியாக்கி கார்த்திகை, ரோகிணி, திருவாதிரை நட்சத்திரத்தின் முதல் பாதம் சேர்த்து ரிசப ராசியாக முதல் ராசியாக்கினார். இப்படி 2000 ஆண்டுகளுக்கு முன்னால் சூரியன் பின் நோக்கி நகர்ந்து மேச ராசியை கடந்ததால் நம் சித்தர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்பு முதல் காலப் புரசனாக மேச ராசியை மாற்றி அமைத்தனர். இப்பொழுது மேச ராசி பின் நகர்ந்து வானில் தன் 24 திகிரி சாய்ந்த வட்டப்பாதையில் கொடிக் கம்பத்திலிருந்து முதல் ராசியாக மீன ராசி வந்து விட்டது. எனவே கால ஓட்டத்தில் தற்பொழுது, சித்தரியல் நாட்காட்டியை முறைப்படுத்தித் திருத்த வேண்டும். மீண்டும் சமநாளில் சித்திரை-1 ஆரம்பித்து ஒவ்வொரு 60 சுழல் ஆண்டுக்கும் ஒரு முறை நாம் சித்திரை-1 ஒரு தேதியை முன் நகர்த்தி திருத்தம் செய்ய வேண்டும். இந்த முயற்சிதான் நம் சித்தர் இயல் நாட்காட்டி ஆகும்.
🏠 முகப்பு
Please select an option below.