சிவவாக்கியம் பாடல் 84 – தில்லையை வணங்கி
84. தில்லையை வணங்கி நின்று , தெண்டனிட்ட வாயுவை !
எல்லையை கடந்து நின்ற ஏகபோக மாய்கையும்,
தெல்லையை கடந்து நின்ற சொர்க்க லோக வெளியிலே!
வெள்ளையும் சிவப்புமாகி, மெய் கலந்து நின்றதே!.
சிவவாக்கியம் பாடல் 83 – நெஞ்சிலே இருந்திருந்து
83. நெஞ்சிலே இருந்திருந்து, நெறிங்கி ஓடு வாயுவை,
அன்பினால் இருந்து நீர் அருகிருத்த வல்லீரேல்,
அன்பர் கோயில் காணலாம், அகன்று மென் இசைக்குளே ,
தும்மி ஓடி ஓடியே, சொல்லடா சுவாமியே!.
சிவவாக்கியம் பாடல் 82 – இறைவனால் எடுத்த மாட
82 . இறைவனால் எடுத்த மாட, தில்லை அம்பலத்திலே! அறிவினால் அடுத்த காயம் அஞ்சினால் அமர்ந்ததே!
கருவில் நாதம் மூண்டு போய், சுழன்று வாசல் ஒன்பதும்,
ஒருவராய், ஒருவர் கோடி உள்ளுலே அமர்ந்ததே!
சிவவாக்கியம் பாடல் 81 – சோதி ஆதி
81. சோதி ஆதி ஆகி நின்ற , சுத்தமும் பலித்து வந்து,
போதியாத போதகத்தை, ஓதுகின்ற பூரணா !
வீதியாக ஓடிவந்து , விண்ணடியின் ஊடுபோய்,
ஆதிநாத நாதன் என்ற அனந்த காலம் உள்ளதே!
சிவவாக்கியம் பாடல் 80 – பருகி ஓடி
80. பருகி ஓடி உம்முளே, பறந்து வந்த வெளிதனை,
நிறுவியே நினைத்துப் பார்க்கில், நின் மலம் அதாகுமே!
உருகி ஓடி எங்குமாய் உதயசோதி தன்னுளே,
கருதடா உனக்கு நல்ல காரணம் அதாகுமே.
சிவவாக்கியம் பாடல் 79 – பாடுகின்ற தும்பருக்கன்
79. பாடுகின்ற தும்பருக்கன் அங்கநாங்கென்னெழுக்கியே,
பழுதிலாத கண்ம கூட்டம், இட்ட எங்கள் பரமனே!
வீடு செம்பொன் அம்பலத்தில், ஆடு கொண்ட அப்பனே!
நீல கண்ட, கால கண்ட, நித்ய கல்யானனே.!.
சிவவாக்கியம் பாடல் 78 – கான மற்ற
78. கான மற்ற காட்டகத்தில், வெந்தெழுந்த நீரு போல்,
ஞானமற்ற நெஞ்சகத்தில், நல்லது ஏதும் இல்லையே!
ஊனமற்ற சோதியோடு உணர்வு சேர்ந்து அடக்கினால்,
தேனகத்தின் ஊரல் போல் தெளிந்ததே சிவாயமே!.
சிவவாக்கியம் பாடல் 77 – மாடு கன்று
77. மாடு கன்று செல்வமும், மனைவி மைந்தர் மகிழவே !
மாட மாளிகை புறத்தில் வாழுகின்ற நாளிலே !
ஓடி வந்து கால தூதர், சடுதியாக மோதவே!
உடல் கிடந்து, உயிர் கழன்ற உண்மை கண்டு உணர்கிலீர்?
சிவவாக்கியம் பாடல் 76 – ஒக்கவந்து மாதுடன்
76. ஒக்கவந்து மாதுடன், செறிந்திடத்தில் அழகிய,
ஒருவராகி, இருவராகி இளமை பெற்ற ஊரிலே,
அஃகனிந்து, கொன்றை சூடும் அம்பலத்தில் ‘ஆடுவார்,
அஞ்செழுத்தை ஓதிடில் அனேக பாவம் அகலுமே!
சிவவாக்கியம் பாடல் 75 – மிக்கசெல்வன் நீ
75. மிக்கசெல்வன் நீ படைத்த விறகு மேனி பாவிகாள்,
விறகுடன் கொளுத்தி மேனி , வெந்து போவது அறிகிலீர்,
மக்கள், பெண்டிர் சுற்றம் என்று மாயை காணும் இவையெலாம்,
மறலி வந்தழைத்த போது, வந்து கூடலாகுமோ!.
சிவவாக்கியம் பாடல் 74 – மண் கலம்
74.மண் கலம் கவர்ந்த போது, வைத்து வைத்து அடுக்குவர்.
வெண்கலம் கவர்ந்த போது, நாறும் என்று பேணுவார்.
தன் கலம் கவர்ந்த போது நாறும் என்று போடுவார்.
என் கலந்து நின்ற மாயம் , என்ன மாயம்? ஈசனே !.
சிவவாக்கியம் பாடல் 73 – மண்ணிலே பிறக்கவும்
73. மண்ணிலே பிறக்கவும், வழக்கலாது உறைக்கவும்,
எண்ணிலாத கோடி தேவர், என்னது உன்னது என்னவும்.
கண்ணிலே கண் மனி இருக்க, கண் மறைந்தவாறு போல்,
எண்ணில் கோடி தேவரும் இதன் கண்ணால் விழிப்பரே.