Sidhariyal
சிவவாக்கியம்
சிவவாக்கியம் பாடல் 324 – விங்கு வென்ற
324. விங்கு வென்ற அட்சரத்தின் வேட்டுவாகி கூ வுடன். சுங்கமாக சோமனோடு சோமன் மாறி நின்றிடும், அங்க மாமுனைச் சுழியில் ஆகும் ஏக வாகையாய், கங்குலற்று தியான முற்று காணுவாய் சுடரொளி!
சிவவாக்கியம் பாடல் 324 – விங்கு வென்ற
324. விங்கு வென்ற அட்சரத்தின் வேட்டுவாகி கூ வுடன். சுங்கமாக சோமனோடு சோமன் மாறி நின்றிடும், அங்க மாமுனைச் சுழியில் ஆகும் ஏக வாகையாய், கங்குலற்று தியானமற்று காணுவாய் சுடரொளி!
சிவவாக்கியம் பாடல் 323 – ஆண்மை ஆண்மை
323. ஆண்மை ஆண்மை ஆண்மை ஆண்மை ஆண்மை கூறும் அசடரே!. தாண்மையான வாதி ரூபம் கால கால காலமும், வாண்மையாகி மௌனமான பாசம் ஆகி நின்றிடும், நாண்மையான நரலை வாயில் நங்கும் இங்கும் அங்குமே!
சிவவாக்கியம் பாடல் 322 – வாதி வாதி வாதி
322. வாதி வாதி வாதி வாதி வண்டலை அறிந்திடான் ! ஊதி ஊதி ஊதி ஊதி ஒளி மழங்கி உளறுவான். வீதி வீதி வீதி வீதி விடையறுப் பொருக்குவோர், சாதி சாதி சாதி சாதி சாகரத்தைக் கண்டிடார்.
சிவவாக்கியம் பாடல் 321 – கருத்திலான் வெளுத்திலான்
321. கருத்திலான் வெளுத்திலான், பரணிருந்த காரணம்! இருத்திலான், ஒழித்திலான், ஒன்றும், இரண்டும் ஆகிலான்! ஒருத்திலான், மறித்திலான், ஒழிந்திடான், அழிந்திடான், கருத்தில் கீ யும், கூ வும் உற்றோர், கண்டறிந்த ஆதியே!.
சிவவாக்கியம் பாடல் 320 – கோடி கோடி
320. கோடி கோடி கோடி கோடி குவலயத்தோர், ஆதியை! நாடி நாடி நாடி நாடி நாள் அகன்று வீணதாய் ! தேடி தேடி தேடி தேடி தேகமும் கசங்கியே! கூடி கூடி கூடி கூடி நிற்பர் கோடி கோடியே!
சிவவாக்கியம் பாடல் 319 – ஆ கி கூ!
319. ஆ கி கூ வென்றே உரைத்த அட்சரத்தின் ஆனந்தம், யோகி , யோகி என்பர் கோடி , உற்றறிந்து கண்டிடார் ! ஊகமாய் மனக் குரங்கு பொங்குமங்குமிங்குமாய், ஏகம் ஏகமாகவே இருப்பர் கோடி கோடியே !
சிவவாக்கியம் பாடல் 318 – பழுத்திடான், அழித்திடான் !
318. பழுத்திடான், அழித்திடான், மாய ரூபம் ஆகிடான். கழன்றிடான், வெகுண்டிடான், கால கால காலமும். துவண்டிடான், அசைந்திடான், தூய தூபம், ஆகிடான். சுவன்றிடான், உரைத்திடான், சூட்ச, சூட்ச சூட்சமே!
சிவவாக்கியம் பாடல் 317 – வாளுரையுள் வாள் !
317. வாளுரையுள் வாள் அடக்கம், வாயுரையுள் வாய் அடக்கம். ஆளுரையுள் ஆளடக்கம், அருமை என்ன வித்தை காண். தாளுரையுள் தாளடக்கம் தன்மையான தன்மையும், நாளுரையுள் நாளடக்கம் நானும் நீயும் கண்டதே!
சிவவாக்கியம் பாடல் 316 – மௌன அஞ்செழுத்திலே!
316. மௌன அஞ்செழுத்திலே! வாசி ஏறி மெல்ல வே! வானளாய் நிறைந்த சோதி மண்டலம் புகுந்த பின்! அவனும் நானும் மெய் கலந்து அனுபவித்த அளவிலே ! அவனும் உண்டு , நானும் இல்லை, யாரும் இல்லை ஆனதே!
சிவவாக்கியம் பாடல் 315 – புவன சக்கரத்துலே
315. புவன சக்கரத்துலே , பூத நாத வெளியிலே! பொங்கு தீப அங்கியுள், பொதித்தெழுந்த வாயுவை ! தவன சோமன் இருவரும், தாம் இயங்கும் வாசலில், தண்டு மாறி ஏறி நின்ற சரசமான வெளியிலே!
சிவவாக்கியம் பாடல் 313 – ஓடுகின்ற ஐம்புலன்
314. ஓடுகின்ற ஐம்புலன், ஒடுங்க அஞ்செழுத்துலே! நாடுகின்ற நான்மறை, நவிழுகின்ற ஞானிகாள், ஊடுகின்ற கண்டித குணங்கள் மூன்றெழுத்துலே ! ஆடுகின்ற பாவையாம், அமைந்ததே சிவாயமே!