Sidhariyal

சிவவாக்கியம் பாடல் 316 – மௌன அஞ்செழுத்திலே!

சிவவாக்கியம்

Posted on பிப்ரவரி 9, 2026

316. மௌன அஞ்செழுத்திலே! வாசி ஏறி மெல்ல வே! வானளாய் நிறைந்த சோதி மண்டலம் புகுந்த பின்! அவனும் நானும் மெய் கலந்து அனுபவித்த அளவிலே ! அவனும் உண்டு , நானும் இல்லை, யாரும் இல்லை ஆனதே!
316. மௌன அஞ்செழுத்திலே! வாசி ஏறி மெல்ல வே! வானளாய் நிறைந்த சோதி மண்டலம் புகுந்த பின்! அவனும் நானும் மெய் கலந்து அனுபவித்த அளவிலே ! அவனும் உண்டு , நானும் இல்லை, யாரும் இல்லை ஆனதே! மௌன அஞ்செழுத்துலே என்றால் மூலாதாரத்தில் எழுந்து ஐந்து சக்ரங்களைக் கடந்து ஏழாவது சக்கரத்தில் இந்த பிரபஞ்சத்தை உச்சியில் வெளியேறி , அந்த வானளாய் நிறைந்த சோதி மண்டலம் புகுந்த பின், அவன் மட்டும் இயற்கையாக, இந்த சகசராரமாக, பிரம்மாண்டமாக இருக்கிறான், அங்கு அவனில் கலந்து நான் இல்லாமல், யாரும் இல்லாமல் அவன் மட்டுமே எங்கும் நிறைந்து, மெய்கலந்து நின்றதை , அந்த வேளையில் அனுபவித்தேன் என்கிறார்.
சிவவாக்கியம்
Related Posts