Sidhariyal

சிவவாக்கியம் பாடல் 17 – நாலுவேதம் ஓதுவீர்

சிவவாக்கியம்

Posted on நவம்பர் 25, 2025

நாலுவேதம் ஓதுவீர், ஞானபாதம் அறிகிலீர் பாலுள்நெய் கலந்தவாறு பாவிகாள், அறிகிலீர்! ஆலம்உண்ட கண்டனார் அகத்துளே இருக்கவே காலன்என்று சொல்லுவீர், கனவிலும் அஃதில்லையே.
நாலுவேதம் ஓதுவீர், ஞானபாதம் அறிகிலீர் பாலுள்நெய் கலந்தவாறு பாவிகாள், அறிகிலீர்! ஆலம்உண்ட கண்டனார் அகத்துளே இருக்கவே காலன்என்று சொல்லுவீர், கனவிலும் அஃதில்லையே. ஆலமரத்தின் விதையில் , அது வளர்ந்து, பரந்து, விரிந்து , மலர்ந்து, காய் கணி உருவாகி, மீண்டும் பட்டுப் போவது வரை உள்ள அத்தனை ரகசியத்தையும் உள் அடக்கி சிறு விதையாக காட்சி அளிப்பது போல், இந்த பரந்த , பேரண்டத்தின், அத்தனை தன்மைகளையும் , தகவல் களாக , உள் அடக்கி உள்ள ஆலம் உண்ட கண்டனை , அறிந்து அதை கல் ஆல மரத்தின் அடியில் அமர்ந்து நான்கு வேதியல்களாக ( உருக்கு வேதியல், அதிர்வண வேதியல் , சாம (அரசியல்) வேதியல், யசூரண வேதியல் ( சூரணங்கள் தயாரித்து மருத்துவத்திற்குப் பயன்படுத்துவது, மற்றும் வேதியல், பொருள்களை தயாரித்தல்) ,) நமக்குத் தந்த சிவனை காலன்(யமன்) என்று சொல்கிறீர்களே கனவிலும் அது இல்லை. உண்மையான அந்த நான்கு வேதியல்களை, திருடிக் கொண்டு, நீங்களாக மந்திரம் என்று புரியாத , எதையோ வேதம் என்று ஓதி கொண்டுள்ள உங்களுக்கு , உண்மையான ஞானம் என்றாலும், அதன் நிலையும், அறியாமல் இருக்கிறீர்கள். இவ்வளவுக்கும் காரணமான அவன் பாலில் எப்படி தெய் கலந்து உள்ளதோ? அது போல் , உங்கள் உள்ளே உள்ளதை , அறியாமல் இருக்கும் பாவிகாள்.
சிவவாக்கியம்
Related Posts