Sidhariyal

சிவவாக்கியம் பாடல் 158 – நெத்திபத்தி உழலுகின்ற

சிவவாக்கியம்

Posted on நவம்பர் 25, 2025

158. நெத்திபத்தி உழலுகின்ற நீலமா விளக்கினைப் பத்தியொத்தி நின்றுநின்று பற்றறுத்தது என்பலன் உற்றிருந்து பாரடா உள்ளொளிக்கு மேலொளி அத்தனார் அமர்ந்திடம் அறிந்தவன் அனாதியே.
158. நெத்திபத்தி உழலுகின்ற நீலமா விளக்கினைப் பத்தியொத்தி நின்றுநின்று பற்றறுத்தது என்பலன் உற்றிருந்து பாரடா உள்ளொளிக்கு மேலொளி அத்தனார் அமர்ந்திடம் அறிந்தவன் அனாதியே. நெத்தியில், புருவ மத்தியில் , மனமாக உழலுகின்ற நீலமா விளக்கினை அனையாத அதாவது, எண்ணங்கள் நிற்காமல் உதித்து இயங்கும் , மனத்தைத்தான் அப்படி கூறுகிறார். அதை சூரியனுக்கு ஒப்பிட்டால் அதற்கும் மேல் உள்ள ஒளியாகிய (சிவம் ) அத்தனார் அமர்ந்திடம் அறிந்தவன் அனாதியோ? என்கிறார்.
சிவவாக்கியம்
Related Posts