Sidhariyal

சிவவாக்கியம் பாடல் 317 – வாளுரையுள் வாள் !

சிவவாக்கியம்

Posted on பிப்ரவரி 9, 2026

317. வாளுரையுள் வாள் அடக்கம், வாயுரையுள் வாய் அடக்கம். ஆளுரையுள் ஆளடக்கம், அருமை என்ன வித்தை காண். தாளுரையுள் தாளடக்கம் தன்மையான தன்மையும், நாளுரையுள் நாளடக்கம் நானும் நீயும் கண்டதே!
317. வாளுரையுள் வாள் அடக்கம், வாயுரையுள் வாய் அடக்கம். ஆளுரையுள் ஆளடக்கம், அருமை என்ன வித்தை காண். தாளுரையுள் தாளடக்கம் தன்மையான தன்மையும், நாளுரையுள் நாளடக்கம் நானும் நீயும் கண்டதே! வாளுரையுள் வாள் அடக்கம். அந்த உரைக்குள் அந்த வாள் தான். ஒரு உரைக்குள் ஒரு வாள் தான். வாய் உரைக்குள் வாய் அடக்கம். வாயை விட்டு வார்த்தை வெளியே வந்து விட்டால் அது வேலை செய்யத் தொடங்கும். ஆனால் வாய்க்குள்ளேயே வார்த்தை இருந்தால் அது நடக்கும். அதுதான் நடக்கும். அருமை என்ன வித்தை கான், என்கிறார். மனம் செயல்படுவதை சொல்கிறார். தாள் என்றால் பயிர்கள் முளைத்து தாள்களாக ஒன்றின் உள் மற்றது, முளைத்து எழும். ஓரிலைத் தாவரங்கள் அப்படித்தான் ஒன்றின் உள் ஒன்று முளைத்து வெளிவரும். சூரியனும், பூமியும், நிலவும், ஒன்றை ஒன்று சுற்றிக் கொண்டே நாளை உருவாக்குகிறது. ஒரு நாளிலிருந்து அடுத்த நாள் உருவாகிறது என்கிறார். இதை நானும் நீயும் தினமும் கான்கிறோம். காலம் தான் உயிர். உயிர் காலத்திற்குள் தான் இருக்கிறது. தமிழில் உயிர் எழுத்து என்பது periodic table தான். நாட்கள் தான் காலம். நானும் நீயும் இருக்கும் நாட்களில் தான் இந்த உலகினை கான அறிய முடியும் என்கிறார்.
சிவவாக்கியம்
Related Posts