சிவவாக்கியம் பாடல் 256 – ஏக முக்கி
256. ஏக முக்கி, மூன்று முக்தி, நாலு முக்கி, நன்மை சேர்.
போகமுற்றி புன்னியத்தில் முக்கியன்றி முக்கியாய்.
நாகமுற்ற சயனமாய் நலம் கடல் கடந்த தீ,
ஆக முக்தி ஆகி நின்ற தென் கொலாதி தேவனே.
சிவவாக்கியம் பாடல் 255 – மட்டுலாவு தந்துளாய்
255. மட்டுலாவு தந்துளாய் அலங்கலாய் புணர்கழல்,
விட்டு வீழில் தாக போக விண்ணில் மண்ணில் வெளியினும்.
எட்டினோடு இரண்டினும், இதத்தினால் மணம் தனை,
கட்டி வீடிலாது வைத்த காதல் இன்பம் ஆகுமே!
சிவவாக்கியம் பாடல் 254 – அடக்கினும் அடக்
254. அடக்கினும் அடக் கொனாத அம்பலத்தின் ஊடு போய்.
அடக்கினும் அடக் கொனாத அன்பிருக்கும் என்னுளே!
இடக்கினும், இருக்கினும் கிலேசம் வந்து இருக்கிடும்.
நடக்கினும் இடைவிடாத நாத சங்கு ஒலிக்குமே!….
சிவவாக்கியம் பாடல் 253 – விண்ணி நின்று
253. விண்ணி நின்று மின் எழுந்து, மின் ஒடுங்குமாறு போல்,
என்னுள் நின்று என்னும் ஈசன் என் அகத்துள் இருக்கையால்.
கண்ணில் நின்று கண்ணில் தோன்றும் , கண் அறிவிலாமையால்,
என்னுள் நின்ற என்னையும் , யான் அறிந்ததில்லையே!
சிவவாக்கியம் பாடல் 285 – உள்ளினும் புறம்பினும்
285. உள்ளினும், புறம்பினும் , உலகமெங்கனும், பறந்து !
எள்ளில் எண்ணெய் , போல நின்று, இயங்குகின்ற எம்பிரான்.
மெல்ல வந்து என்னுள் புகுந்து, மெய்த்தவம் புரிந்த பின்,
வள்ளல் என்ன வள்ளலுக்கு வண்ணம் என்ன வண்ணமே !
சிவவாக்கியம் பாடல் 284 – வாக்கினால் மனத்தினால்
284. வாக்கினால் மனத்தினால், மதித்த காரணத்தினால்,
நோக்கொனாத நோக்கை உண்ணி, நோக்கை யாவர் நோக்குவார்,
நோக்கொணாத நோக்கு வந்து , நோக்க நோக்க நோக்கிடில்,
நோக்கொணாத நோக்கு வந்து, நோக்கை என் கண் நோக்குமே!.
சிவவாக்கியம் பாடல் 252 – என் அகத்துள்
252. என் அகத்துள் என்னை நான் எங்கும் நாடி ஓடினேன்.
என் அகத்துள் என்னை நான் அறிந்திலாத தன்மையால்
என் அகத்துள் என்னை நான் அறிந்துமே தெரிந்த பின்,
என் அகத்துள் என்னை அன்றி யாதும் ஒன்றும் இல்லையே!
சிவவாக்கியம் பாடல் 251 – ஆரலைந்த பூதமாய்
251 . ஆரலைந்த பூதமாய், அளவிடாத யோனியும்,
பாரமான தேவரும், பலுதிலாத பாசமும்,
பூரணாத அண்டமும்,
லோக, லோக, லோகமும்
சேர வெந்து போயிருந்த தேகம் ஏது செப்புமே?
சிவவாக்கியம் பாடல் 250 – உள் அதோ?
250. உள் அதோ ? புறம் அதோ? உயிர் ஒடுங்கி நின்றிடம்.
மெல்ல வந்து கிட்ட நீர் வினவ வேண்டும் என்கிறீர்.
உள் அதும் புறம் அதும் ஒத்த போது நாதமாம்,
கள்ள வாசலைத் திறந்து காண வேணும் மாந்தரே.
சிவவாக்கியம் பாடல் 249 – அண்ணலாவதேதடா?
249. அண்ணலாவதேதடா? அறிந்துரைத்த மந்திரம்.
தண்ணலாக வந்தவன் சகல புராணங்கற்றவன்,
கண்ணனாக வந்தவன் காரணத் துதித்தவன்,
ஒன்னதாவதேதடா? உண்மையான மந்திரம்.
சிவவாக்கியம் பாடல் 248 – அம்பலங்கள் சந்தியில்
248. அம்பலங்கள் சந்தியில், ஆடுகின்ற வம்பனே!
அன்பனுக்கு அன்பராய் நிற்பன் ஆதி வீரனே!
அன்பருக்குள் அன்பனாய் நின்ற ஆதி நாதனே !
உம்பருக்கு உண்மையாய் நின்ற உண்மை உண்மையே!
சிவவாக்கியம் பாடல் 247 – புண்டரீக மத்தியில்
247. புண்டரீக மத்தியில் உதித்தெழுந்த சோதியை,
மண்டலங்கள் மூன்றினோடு மண்ணுகின்ற மாயனை,
அண்டரண்டம் ஊடறுத்து அறிந்துணர வல்லீரேல்,
கண்ட கோயில் தெய்வம் என்று கையெடுப்பது இல்லையே!