சிவவாக்கியம் பாடல் 61 – கருவிருந்த வாசலால்
61.கருவிருந்த வாசலால், கலங்குகின்ற ஊமைகாள் , குருவிருந்து சொன்ன வார்த்தை, குறித்து நோக்க வல்லீரேல். ‘உருவிலங்கு மேனியாகி, . உம்பராகி நின்று நீர், திரு விலங்கு மேனியாகி , சென்று கூடலாகுமே!
சிவவாக்கியம் பாடல் 60 – மையடர்ந்த கண்ணினால்
60.மையடர்ந்த கண்ணினால், மயங்கிடும் மயக்கிலே| ஐயிறந்து கொண்டு நீங்கள், அல்லல் அற்று இருப்பீர்காள், மெய்யடர்ந்த சிந்தையால், விளங்கு ஞானம், எய்தினால், உய் அடர்ந்து கொண்டு , நீங்கள் ஊழி காலம் வாழ்வீரே!
சிவவாக்கியம் பாடல் 59 – அண்டம் நீ
59. அண்டம் நீ , அகண்டம் நீ . ஆதிமூலம் ஆன நீ, கண்டம் நீ,கருத்து நீ , காவியங்கள் ஆன நீ, பூண்டரீக மற்றுளே, புணருகின்ற புன்னியர், கொண்ட கோலம், ஆன நேர்மை, கூர்மை என்ன கூர்மையே!.
சிவவாக்கியம் பாடல் 58 – அறத்திறங்களுக்கும் நீ
58. அறத்திறங்களுக்கும் நீ, அண்டம் எண் திசைக்கும் நீ, திறத்திறங்களுக்கும் நீ, தேடுவார்கள் சிந்தை நீ, உறக்கம் நீ, உணர்வு நீ, உட்கலந்த சோதி நீ, மறக்கொனாத நின் கழல், மறப்பினும் குடி கொளேல்.
சிவவாக்கியம் பாடல் 57 – போதடா வெழுந்ததும்
57. போதடா வெழுந்ததும், புணலதாகி வந்ததும், தாதடா புகுந்ததும், தானடா, விளைந்ததும், ஓதடா , ஐந்தும் மூன்றும், ஒன்றதான வக்கரம், ஓதடா விராம ராம ராம என்னும் நாமமே!
சிவவாக்கியம் பாடல் 56 – உற்ற நூல்கள்
56. உற்ற நூல்கள், உம்முள்ளே. உணர்ந்து, உணர்ந்து பாடுவீர். பற்று அறுத்து, நின்று நீர், பராபரங்கள் எய்திலீர், செற்றமாவை உள்ளரைச் செருக்கருத்து இருத்திடில், சுற்றமாக உம்முளே, சோதி என்றும் வாழுமே.
சிவவாக்கியம் பாடல் 55 – எத்திசைக்கும், எவ்வுயிர்க்கும்
55. எத்திசைக்கும், எவ்வுயிர்க்கும், எங்கள் அப்பன், எம் பிரான். முக்தியான வித்துளே, முளைத்தெழும் தவச்சுடர். சித்தமும் தெளிந்த, வேத கோவிலும் திறந்த பின். அத்தன் ஆடல் கண்டபின், அடங்கலாடல் காணுமே!
சிவவாக்கியம் பாடல் 54 – தில்லை நாயகன்
54. தில்லை நாயகன் அவன், திருவரங்கனும் அவன், எல்லையான புவனமும், ஏக முக்கி ஆனவன், பல்லு, நாவு உள்ள பேர், பகுத்துக் கூறி மகிழவார். வல்லபங்கள் பேசுவார், வாய் புழத்து மாய்வரே!
சிவவாக்கியம் பாடல் 53 – நாழி அப்பும்
53. நாழி அப்பும், நாழி உப்பும், நாழி ஆன வாறு போல். ஆழியோனும், ஈசனும், அமர்ந்து , வாழ்ந்து இருந்திடம். ஏறிலேரும் ஈசனும், இயங்கு சக்ர தரனையும் , வேறு கூறு பேசுவார், வீழ்வர் வீண் நரகிலே!
சிவவாக்கியம் பாடல் 52 – இடது கண்கள்
52. இடது கண்கள் சந்திரன், வலது கண்கள் சூரியன். இடக்கை சங்கு சக்கரம், வலக்கை சூழ மான் மழ, எடுத்த பாதம், நீள்முடி, எண் திசைக்கும் அப்புறம், உடல் கலந்து நின்ற மாயம், யாவர் காண வல்லரே!
சிவவாக்கியம் பாடல் 51 – ஆடு காட்டி
51. ஆடு காட்டி வேங்கையை, அகப்படுத்துமாறு போல், மாடு காட்டி என்னை நீ, மதிமயக்கலாகுமோ! கோடு காட்டி யானையை, கொன்று உரித்த கொற்றவா !, வீடு காட்டி என்னை நீ , வெளிப் படுத்த வேனுமே!.
சிவவாக்கியம் பாடல் 51 – கை வடங்கள்
51. கை வடங்கள் கண்டு நீர் கண்சிமிட்டி நிற்கிறீர், எவ்விடங்கள் கண்டு நீர், எண்ணி எண்ணி பார்க்கிறீர். பொய் உணர்ந்த சிந்தையை , பொறுந்தி நோக்க வல்லீரேல்! மெய் கடந்து உம்முள்ளே விளைந்து கூறலாகுமே!