Sidhariyal
வலைப்பதிவு
சிவவாக்கியம் பாடல் 38 – இருக்க நாலு

38. இருக்க நாலு வேதமும், எழுத்தை அற ஓதினும்! பெருக்க நீறு பூசினும், பிதற்றினும், பிரான் இரான், உருக்கி நெஞ்சை, உட்கலந்து, உண்மை கூற வல்லீரேல்? சுருக்கமற்ற சோதியை, தொடர்ந்து கூடலாகுமே.

சிவவாக்கியம் பாடல் 37 – பூசை பூசை

37. பூசை பூசை என்று நீர், பூசை செய்யும் பேதைகாள், பூசை உள்ள. தன்னிலே, பூசை கொண்டது எவ்விடம்? ஆதி பூசை கொண்டதோ? அனாதி பூசை கொண்டதோ? ஏது பூசை கொண்டதோ? , இன்னதென்று இயம்புமே?

சிவவாக்கியம் பாடல் 36 – கோயிலாவது ஏதடா?

36. கோயிலாவது ஏதடா? குளங்கலாவது ஏதடா? கோயிலும், குளங்களும், கும்பிடும் குலாமரே! கோயிலும் மனத்துள்ளே, குளங்களும் மனத்துள்ளே, ஆவதும், அழிவதும் இல்லை இல்லை இல்லையே!.

சிவவாக்கியம் பாடல் 35 – மாறுபட்டு மணி

35. மாறுபட்டு மணி துலக்கி, வண்டின் எச்சில் கொண்டு போய், ஊறுபட்ட கல்லின் மீதே, ஊற்றுகின்ற , மூடரே, மாறுபட்ட தேவரும், அறிந்து நோக்கும் என்னையும், கூறுபட்டு, தீர்க்கவோ, குருக்கள் பாதம் வைத்ததே!.

சிவவாக்கியம் பாடல் 34 – செய்ய தெங்கிலே

34. செய்ய தெங்கிலே இளநீர், சேர்ந்த காரணங்கள் போல், ஐயன் வந்து என் உளம், புகுந்து கோயில் கொண்டனன். ஐயன் வந்து என் உளம், புகுந்து கோயில், கொண்ட பின், வையகத்தில் , மாந்தர் முன்னம் வாய் திறப்பதில்லையே!

சிவவாக்கியம் பாடல் 33 – வாட்டில்லாத பரமனை

33. வாட்டில்லாத பரமனை , பரம லோக நாதனை! நாட்டிலாத நாதனை, நாரி பங்கர் பாகனை! கூட்டி மெல்ல வாய்புதைத்து, குனு குனுத்த மந்திரம்! வேட்டக்கார குசுகுசுப்பை கூப்பிடாமு நின்றதே!.

சிவவாக்கியம் பாடல் 32 – நெருப்பை மூட்டி

32. நெருப்பை மூட்டி, நெய்யை விட்டு நித்தம் நித்தம் நீரிலே விருப்படுமாடு நீர் குளிக்கும், வேதவாக்யம் கேளுமின். நெருப்பும், நீரும் உம்முளே, நினைத்துக் கூற வல்லிரேல்? சுருக்கமற்ற சோதியை, தொடர்ந்து கூடலாகுமே!

சிவவாக்கியம் பாடல் 31 – அண்டர் கோன்

31. அண்டர் கோன், இருப்பிடம், அறிந்து உணர்ந்த ஞானிகள். பண்டறிந்த பான்மை தன்னை , யார் அறிய வல்லரோ? விண்ட வேத பொருளையன்றி, வேறு கூற வகையில்லா? கண்ட கோயில் தெய்வமென்று , கை எடுப்பதில்லையே!,

சிவவாக்கியம் பாடல் 30 – பண்டு நான்

30. பண்டு நான் பறித்தெறிந்த, பண் மலர்கள். எத்தனை? பாழிலே செபித்துவிட்ட , மந்திரங்கள் எத்தனை? பிண்டனாய் திரிந்த போது, இறைத்த நீர்கள் எத்தனை? மீளவும் சிவாலயங்கள் , சூழ வந்தது எத்தனை?

சிவவாக்கியம் பாடல் 29 – அண்ணலே அனாதியே

29. அண்ணலே அனாதியே, அனாதி முன் அனாதியே! பெண்ணும், ஆணும் ஒன்றலோ, பிறப்பதற்கு முன்னெலாம். கண்ணில் ஆணின் சுக்கிலம், கருவில் ஓங்கும் நாளிலே! மண்ணுலோரும், விண்ணுலோரும், வந்தவாற தெங்கனே.?

சிவவாக்கியம் பாடல் 28 – ஓடமுள்ள போதெல்லாம்

ஓடமுள்ள போதெல்லாம், ஓடியே உலாவலாம். ஓடமுள்ள போதெல்லாம் உறுதி பண்ணிக் கொள்ளலாம். ஓடம் உடைந்த போது , ஒப்பில்லாத நாளிலே ! ஆடுமில்லை கோளுமில்லை , யாருமில்லை ஆனதே!

சிவவாக்கியம் பாடல் 27 – வீடெடுத்து வேள்வி

வீடெடுத்து வேள்வி செய்து மெய்யரோடு , பொய்யுமாய், மாடு, மக்கள், பெண்டிர், சுற்றம், என்றிருக்கும், மாந்தர்காள். நாடு பெற்ற நடுவர் கையில் ஓலை வந்து அழைத்திடில், ஓடு பெற்றது அவ்விலை, பெறாது காணும் உடலமே!