Sidhariyal

இயற்கையோடு இயைந்த வாழ்வியலாளர், இளங்கோவுக்கு (வரலாறு)

Posted on பிப்ரவரி 9, 2026

இயற்கையோடு இயைந்த வாழ்வியலாளர், இளங்கோவுக்கு இப்படி ஆகி விட்டதே. மற்றும் தங்கை காயத்தியின் மனநிலை எப்படி இருக்கிறதோ என்ற ஆதங்கத்தில் அன்று பதட்டத்துடன் இதயவணம் வந்த பொழுது, இளங்கோவை விட காயத்திரியின் மனோபலத்தின் தாக்கத்தில் திரு ஜெயசீலன் அவர்களின் அனாசயமான , இந்திய சட்ட புரிதலின் ஒரு நாள் கலந்துரையாடலில் மன பாரம் இறங்கி, அடுத்த கட்ட நிகழ்வில், நம் காவலர்களின் மற்றொரு பயம் கலந்த முகத்தை பார்த்து , வியந்து அடுத்த கட்ட நிகழ்வாக சட்ட காவலர்களான Judicial – மேட்டுப்பாளையம் Courrt -ல் காலை 9 மணிக்கு சென்றடைந்தோம். என் 60 வயது வாழ்நாளில், முதல் முறையாக சட்ட காவலர்களின் அலுவலக நடைமுறைகளை காலையிலிருந்து மாலை வரை பார்த்து, நொந்து நம் இயலாமையை எண்ணி அவர்களின் நடவடிக்கைகளை கண்காணித்த வண்ணம் இருந்தோம். ஐயா சட்டை அணியா சாமியப்பன் அவர்களை 10 வருடம் கழித்து பார்த்து அளாவி பேசிக் கொண்டே அந்த கோர்ட்டின் பரிதாப நிகழ்வுகளை அசை போட்டுக் கொண்டு இருந்தோம். Judge எனும் போர்வையில் பாவம் அந்தப் பெண்மணி விழி பிதுங்கி பரிதவித்து சட்ட நடவடிக்கைகளை பட்டும் படாமலும் சமாளித்து வெளியேறிய தருணத்தில் நாங்கள் தவித்துப் போனோம். நம் காவர்கள் தான் இப்படி என்றால் Court – வளாகத்திலும் நீதி கிடைக்காது போல இருக்கிறது என நினைத்த பொழுது, JMC – என்.பவரிடம் நம் நமது ஜெயசிலன் அய்யாவும், காமாட்சியும், சட்ட நம்பர்களை எடுத்துச் சொல்லி ஏன் எங்களுக்கு நம்பர் கொடுக்க மறுக்கிறீர்கள் என கேட்ட பொழுது, அப்பொழுது தான் புரிந்தது, அந்த Judge மற்றும், Jmc போன்றோர்கள் சட்ட update தெரியவில்லை என்று. கடைசியாக வரும் 30/1 அன்று வாருங்கள் உங்கள் Shout – ஐ நாங்கள் படித்து விட்டு புரிந்து கொண்டு உங்களுக்கு number கொடுக்கிறோம் என சொல்லி அனுப்பி விட்டார்கள். நாம் நம் இந்திய சட்டபங்களை மதித்து அனைவரும் இளங்கோவின் வீட்டிற்கு சென்று மீண்டும் அவரிடம் என்ன நடந்தது என நடித்து கான்பித்து காட்டுமாறு அனைவரும் கவனித்தோம். அதை இனிய பயனமாக, நம் இந்திய Court நடைமுறைகளை அவதானிக்க வைத்த திரு ஜெயசீலன் ஐயாவிற்கு நன்றி.
Related Posts