இரண்டு நாட்களாக பழனியில் , முருக பக்தர் (வரலாறு)
Posted on பிப்ரவரி 11, 2026
இரண்டு நாட்களாக பழனியில் , முருக பக்தர்களின் , உடல் ரீதியான பலன் என்று ஒரு புறம் இருந்தாலும், ஏனென்றே தெரியாமலேயே, இவ்வளவு பக்தியுடன், சிரத்தையுடன், காவடிகளை சுமந்து, நடந்தே, கூட்டமாக ஒவ்வொரு ஊரிலிருந்தும், பழனியை அடைந்து , தெய்வ நாயகி அம்மன் சன்னதியில் உற்சாகமாக, துடும்பு, உருட்டு அடிகளோடு, காவடி ஆட்டம் போட்டு அங்கிருந்து திருவினாங்குடியில், மீண்டும் ஒரு உற்சாகமான ஆட்டம் மீண்டும், அடிவாரத்தில் ஒரு ஆட்டம், முடித்து மலைக்கு மேல் ஏறி குமரனை தரிசித்து அவரவர் வீட்டுக்கு கலைந்து செல்கிறார்கள்.
நம் முன்னோர்களின் அறம் சார்ந்த வாழ்வியல் , என்னவென்றே தெரியாமல் இரண்டாயிரம் வருசங்களாக பல நல்ல பழக்க வழக்கங்களை, நம் தமிழ் இனத்திற்கு, கடத்த முடிந்திருக்கிறது என்றால் , அவர்களின் நேர்மையான வாழ்வியலால் தான்.
ஒவ்வொரு ஊழியும் 6,480 ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டாயம் வரும். அதை வென்றெடுக்க இப்படி இடைவிடாத நடை பயிற்சியும், மலை ஏறும் பயிற்சியும், உற்சாகமாக எவ்வளவு இடையூறுகள் வந்தாலும், ஆடல் பாடலுடன் வாழ்வியலை ஆனந்தமயமாக்கி இருக்கிறார்கள் நம் முன்னோர்கள், அதை நம் உயிரணுக்களில் கடத்தி எதற்கும் அசராமல் நம் வாழ்வியல் சென்று கொண்டு இருப்பதை நினைத்து பெருமை கொள்ள வைக்கிறது.
இருந்தாலும் நம் வரலாறு என்ன, காலம் எப்படி கணித்தார்கள், கோயில், கொடிமரம் எதற்கு? கருவறை என்றால் என்ன என்பதை ஊருக்கு ஒருவர் தெரிந்து அதை மக்களுக்கு இனிமேல் கடத்தினால் வரும் ஊழியை மீண்டும் வென்றெடுத்து விடலாம்.