Sidhariyal

தமிழ் மொழியில் எண்ணிலடங்கா இரட்டைக்கிளவிகள் உள்ளன. (தமிழ்மொழி)

Posted on ஜனவரி 29, 2026

தமிழ் மொழியில் எண்ணிலடங்கா இரட்டைக்கிளவிகள் உள்ளன. கத கத – கதகதப்பு, சூடு, கடகட – விரைவாக, ஒலிக்குறிப்பு கரகர – காய்ந்து இருத்தல் கம கம – மணம் வீசுதல் கண கண – உடம்புச் சூடு கசகச – வியர்த்தல் கலகல – சிரிப்பு கதகத – கொதித்தல் கபகப – பசியெடுத்தல் கடுகடு – கோபமாக பேசுதல் கரகர – தொண்டை வறட்சி கரகரு – கருப்பு கறகற – தொந்தரவு கலீர் கலீர் – சலங்கையொலி கணீர் கணீர் – மணி ஒலி. கிணு கிணு – மெல்ல இரைதல் கிறுகிறு – விரைவாக /சுற்றுதல் கிளு கிளு – சிரித்தல் / மகிழ்ச்சி கிடுகிடு – விரைவாக /அச்சம் கிசுகிசு – இரகசிய பேச்சு. கிச்சுகிச்சு – நகைச்சுவை கீச்சுகீச்சு – ஒலிக்குறிப்பு (பறவைகளின் ஒலி) கீர்கீர் – ஒலிக்குறிப்பு (கத்துதல்) குடுகுடு – விரைந்தோடித் திரிதல், நடத்தல் குளுகுளு – தென்றல் காற்று / குளிர் குபீர் குபீர் – குருதி பாாய்தல் குறு குறு – மனம் உறுத்துதல் குசுகுசு – ரகசியம் பேசுதல் குமுகுமு – மிக மணத்தல் குபுகுபு – புகை கிளம்புதல் கொழு கொழு – பருத்தல் சட சட – ஒலிக்குறிப்பு (பரபரத்தல்), சிறகுகளை அடித்துக் கொள்ளல், முறிதல் சடார் சடார் – பொருட்கள் மோதுதல்/விழுதல் சரசர – ஒலித்தல் ,உரசல் ஒலி சலசல – ஒலிக்குறிப்பு , நீரின் ஓசை சளசள – ஓயாத இரைச்சல் பேச்சு சிலீர் சிலீர் – குளிர்தல் சிடுசிடு – எரிச்சல் கலந்த கோபம் சுள்சுள் – வலித்தல் சுறு சுறு – கோபம் டாங்டாங் – ஒலிக்குறிப்பு (மணி ஒலி) தடதட – நாத்தட்டுதல், முரட்டுத்தனமாக தரதர – தரையில் உராயும் வகையில் இழுத்தல் தளதள – இளக்கம், சோபை தழுதழு – நாத்தடுமாறுதல் தகதக – ஜொலிப்பு ,எரிதல் , மின்னுதல் திருதிரு – அச்சம் ,முழித்தல் திடு திடு – விரைவான ஓட்டம் துடு துடு – ஒலிக்குறிப்பு துருதுரு – சுறுசுறுப்பு துடி துடி – இரங்குதல் ,வலியால் அவதியுறல் தொளதொள – இறுக்கமின்மை தொண தொண – இடைவிடாது பேசுதல் தமநம – தொண்டைக் கமறல் நறு நறு – கோபம் நற நற – பல்லைக் கடித்தல் நெருநெரு – உறுத்தல் நெடுநெடு – உயரக் குறிப்பு நைநை – தொந்தரவு நொளுநொளு – குழைவு பள பள – மினுங்குதல் பரபர – நிதான இழப்பு ,அவசரம் ,வேகமாக செயற்படல் பகபக – வேக குறிப்பு பளிச் பளிச் – மின்னுதல் படபட – இதயத்துடிப்பு பளார் பளார் – கன்னத்தில் அறைதல் பளீர் பளீர் – மின்னல் பிசுபிசு – பசைத்தன்மை புறு புறு – முணுமுணுத்தல் பொசுபொசு – திரட்சிக் குறிப்பு பொல பொல – கண்ணீர் வடிதல் பொலுபொலு – உதிர்தல் மடமட – வேகமாக நீர் குடித்தல் மளமள – முறிதல் மங்குமங்கு – தொடர்வேலை. மினுமினு – பிரகாசித்தல், மிளிர்தல் மெது மெது – மென்மை மொழு மொழு – வளர்ச்சி மொறமொற – மிகக் காய்தல் மொர மொர – கடித்தல் வழவழ – உறுதியின்மை வளவள – பயனின்றி பேசுதல் வளுவளு – நொளு நொளுத்தல் விதிர்விதிர் – அச்சம் விசுக் விசுக் – வேகநடை விண் விண் – வலித்தல் விடுவிடு – வேகமாக விறுவிறு – வேகமாக, பரபரப்புடன் வெடுவெடு – கோபமான பேச்சு் வெதுவெது – இளஞ்சூடு வெலவெல – நடுங்குதல், பதறுதல். *இரட்டை கிளவி சொற்களையும் அதன் பொருளையும்* *புரிந்து கொண்டால்…* *தமிழ் மொழியே ஒரு கவிதைதானே!
Related Posts