திருநாவுக்கரசர் தேவாரம் ஆறாம் திருமுறை (தமிழ்மொழி)
Posted on பிப்ரவரி 6, 2026
மைப்படிந்த கண்ணாளும் தானும் கச்சி மயானத்தான்
வார்சடையான் என்னின் அல்லால்
ஒப்புடையனல்லன் ஒருவனல்லன் ஓரூரனல்லன்
ஓர் உவமனில்லி
அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும் அவனருளே
கண்ணாகக் காணின் அல்லால்
இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவன் இறைவன்
என்றெழுதிக் காட்ட ஒணாதே
திருநாவுக்கரசர் தேவாரம் ஆறாம் திருமுறை