Sidhariyal
சிவவாக்கியம்
சிவவாக்கியம் பாடல் 206 – அணுத் திரண்ட
206. அணுத் திரண்ட கண்டமாய் அனைத்து வல்லி யோனியாய் மனுப் பிறந்து ஓதி வைத்த நூலிலே மயங்குறீர். சனிப்பது ஏது? சாவது ஏது? தாபரத்தின் ஊடு போய் நினைப்பது ஏது ?நிற்பது ஏது ? நீர் நினைந்து பாருமே!
சிவவாக்கியம் பாடல் 205 – அழுக்கறத் தினங்குளித்து
205. அழுக்கறத் தினங்குளித்து அழுக்கறாத மாந்தரே! அழுக்கிருந்த தெவ்விடம்? அழுக்கிலாதது எவ்விடம்? அழுக்கிருந்த அவ்விடத்து அழுக்கறுக்க வல்லிரேல் அழுக்கிலாத சோதியோடு அணுகி வாழலாகுமே!
சிவவாக்கியம் பாடல் 204 – அன்னை கர்ப்பத்
204. அன்னை கர்ப்பத் தூமையில் அவதரித்த சுக்கிலம் முன்னையே தரித்ததும் பனித்துளி போலாகுமே. உன்னை தொக்கு உழலும் தூமை உள்ளுலே அடங்கிடும். பின்னையே பிறப்பதும் தூமை காணும் பித்தரே!!
சிவவாக்கியம் பாடல் 203 – அள்ளி நீரை
203. அள்ளி நீரை இட்டதே, அங்கையில் குழைத்ததேது? மெல்லவே முனுமுனுவென்று விளம்புகின்ற மூடர்கள். கள்ள வேடம் இட்டதேது கண்ணை மூடி விட்டதேது? மெல்லவே குருக்களே விளம்பி பீடீர் விளம்பிடீர்!
சிவவாக்கியம் பாடல் 202 – ஒன்பதான வாசல்தான்ஒழியும்
202. ஒன்பதான வாசல்தான்ஒழியும் நாள் இருக்கையில், ஒன்பதான ராம ராம ராம என்னும் நாமமே வன்மமான பேர்கள் வாக்கில் வந்து நோய் அடைப்பதாம். அன்பரான பேர்கள் வாக்கில் ஆழ்ந்தமை(ஐ)ந்து இருப்பதே!
சிவவாக்கியம் பாடல் 201 – அக்கரம் அனாதியோ
201. அக்கரம் அனாதியோ ஆத்துமா அனாதியோ புக்கிருந்த பூதமும் புலன்களும் அனாதியோ தக்க மிக்க நூல்களும் சதாசிவம் அனாதியோ மிக்க வந்த யோகிகாள் விரித்துறைக்க வேணுமே!
சிவவாக்கியம் பாடல் 200 – ஆதரித்த மந்திரம்
200. ஆதரித்த மந்திரம் அமைந்த ஆகமங்களும் மாதர் மக்கள் சுற்றமும் மயக்க வந்த நித்திரை ஏதுபுக்கொளித்ததோ ? எங்கும் ஆகி நின்றதோ சோதி புக்கொளித்திடம் சொல்லடா சுவாமியே!
சிவவாக்கியம் பாடல் 199 – அஞ்செழுத்தும், மூன்றெழத்தும்
199. அஞ்செழுத்தும், மூன்றெழத்தும் என்றுரைத்த அன்பர்காள். அஞ்செழுத்து, மூன்றெழுத்தும், அல்ல காணும் அப்பொருள். அஞ்செழுத்தும் நெஞ்செழுத்து, ஒள எழுத்து அறிந்த பின் அஞ்செழுத்து ஒள வின் வண்ணம் ஆனதே சிவாயமே!
சிவவாக்கியம் பாடல் 198 – அங்க லிங்க
198. அங்க லிங்க பீடமும், அசைப மூன்று எழுத்தினும், சங்கு சக்கரத்திலும், சகல வானகத்திலும், பங்கு கொண்ட யோகிகள் பரம வாசல் அஞ்சிடும், சங்கு நாத ஓசையும், சிவாயம் இல்லதில்லையே!
சிவவாக்கியம் பாடல் 197 – ஐயிரண்டு திங்களாய்
197. ஐயிரண்டு திங்களாய் அடங்கி நின்ற தூமைதான் கையிரண்டு காலிரண்டு கண்ணிரண்டும் ஆகியே மெய்திரண்டு சத்தமாய் விளங்கி ரச கந்தமும் துய்ய காயம் ஆனதும் சொல்லுகின்ற தூமையே!
சிவவாக்கியம் பாடல் 196 – அல்லிறந்து பகலிறந்து
196. அல்லிறந்து பகலிறந்து அகம் பிரமம் இறந்து போய் அண்டரண்டமும் கடந்த அனேகனேகா ரூபமாய் சொல்லிறந்து மனமிறந்த சுக சொரூப உண்மையைச் சொல்லியாற வின்னில் வேறு துணைவரில்லை ஆனதே!!
சிவவாக்கியம் பாடல் 196 – பட்டமும் கயிறுபோல்
196. பட்டமும் கயிறுபோல் பறக்க நின்ற சீவனை பார்வையாலே பார்த்து நீ படு முடிச்சுப் போடடா திட்டவும் படாதடா சீவனை விடாதடா கட்டடா நீ சிக்கெனக் களவறிந்த கள்வனை.