சிவவாக்கியம் பாடல் 220 – ஆதியான அஞ்சிலும்
220. ஆதியான அஞ்சிலும், அனாதியான நாலிலும் –
சோதியான மூன்றிலும் சொரூபமற்ற இரண்டிலும்-
மீதியான தொன்றிலே நிறைந்து நின்ற வச்த்துவை
ஆதியானதொன்றுமே அற்றதஞ்செழுத்துமே.
சிவவாக்கியம் பாடல் 219 – ஒள எழுத்தில்
219. ஒள எழுத்தில் உவ்வு வந்து அகாரமும் சனித்ததோ?
உவ்வெழுத்தும் மவ்வெழுத்தும் ஒன்றை ஒன்றி நின்றதோ?
செவ்வை ஒத்து நின்றலோ , சிவ பதங்கள் சேரினும்.
சிவ்வை ஒத்த ஞானிகாள் விரித்துரைக்க வேணுமே?
சிவவாக்கியம் பாடல் 218 – அகார காரணத்திலே
218. அகார காரணத்திலே அனேகனேக ரூபமாய்,
உகார காரணத்திலே உருத்தரித்து நின்றனன்.
மகார காரணத்திலே மயங்குகின்ற வையகம்.
சிகார காரணத்திலே தெளிந்ததே சிவாயமே!.
சிவவாக்கியம் பாடல் 217 – வெந்த நீறு
217, வெந்த நீறு மெய்க்கணிந்து வேடமும் தரிக்கிறீர் .
சிந்தையுள் நினைந்துமே தினம் செபிக்கும் மந்திரம்.
முந்து மந்திரத்திலோ? மூலமந்திரத்திலோ?
எந்த மந்திரத்திலோ ? ஈசன் வந்து இயங்குமே!
சிவவாக்கியம் பாடல் 216 – அரியுமாகி அயனுமாகி
216. அரியுமாகி அயனுமாகி அண்டமெங்கும் ஒன்றதாய்
சிறியதாகி உலகு தன்னில் நின்ற பாதம் ஒன்றலோ…
விரிவதென்று வேறு செய்து வேடமிட்ட மூடரே!
அறிவினோடு பாரும் இங்கு, அங்கும் இங்கும்ஒன்றதே!
சிவவாக்கியம் பாடல் 215 – எங்கும் உள்ள ஈசனார்
215. எங்கும் உள்ள ஈசனார் எம்முடல் புகுந்த பின்
பங்கு கூறு பேசுவார் பாடு சென்று அனுகிலார்.
எங்கள் தெய்வம் உங்கள் தெய்வம் என்றிரண்டு பேதமோ?.
உங்கள் பேதம் அன்றியே உண்மை இரண்டும் இல்லையே!….
சிவவாக்கியம் பாடல் 214 – உருத்தரிப்பதற்கு முன்
214, உருத்தரிப்பதற்கு முன் உயிர் புகுந்த நாதமும் .
கருத்தரிப்பதற்கு முன் காயம் என்ன? சுரோணிதம்.
அருள் தரிப்பதற்கு முன் அறிவு மூலாதாரமாம்.
குருத்தறிந்து கொள்ளுவீர் குணம் கெடும் குருக்களே!
சிவவாக்கியம் பாடல் 213 – சுழித்தவோர் எழுத்தையும்
213. சுழித்தவோர் எழுத்தையும் சொண்முகத்து இருத்தியே
துன்ப இன்பமுங் கடந்து சொல்லு மூல நாடிகள்
அழுத்தமான அக்கரம் அங்கியுள் எழுப்பியே!.
ஆறுபங்கையம் கலந்து அப்புறத் தலத்துளே.
சிவவாக்கியம் பாடல் 212 – உயிர் அகத்தில்
212. உயிர் அகத்தில் நின்றிடும், உடம்பெடுத்ததற்கு முன்.
உயிர் அகாரமாகிடும் உடல் உகாரமாகிடும்.
உயிரையும் உடம்பையும் ஒன்றுவிப்பதச்சிவம்.
உயிரினால் உடம்பு தான் எடுத்தவாறு உரைக்கிறேன்.
சிவவாக்கியம் பாடல் 210 – அஞ்செழுத்தின் ஆதியாய்
210. அஞ்செழுத்தின் ஆதியாய் அமர்ந்து நின்றது ஏதடா?
நெஞ்செழுத்தில் நின்று கொண்டு நீ செபிப்பது ஏதடா?
அஞ்செழுத்தின் வாளதால் அறுப்பதான தேதடா?
பிஞ்செழுத்தின் நேர்மைதான் விரித்துரைக்க வேணுமே!
சிவவாக்கியம் பாடல் 209 – அஞ்சும் அஞ்சு
209. அஞ்சும் அஞ்சு அஞ்சும் அஞ்சு அல்லல் செய்து நிற்பதும்
அஞ்சும் அஞ்சும் அஞ்சும் அஞ்சுமே அமர்ந்துளே இருப்பதும்
அஞ்சும் அஞ்சும் அஞ்சுமே ஆதரிக்க வல்லிரேல்
அஞ்சும் அஞ்சும் உம்முளே அமர்ந்ததே சிவாயமே!
சிவவாக்கியம் பாடல் 208 – ஆக்கை முப்பது
208. ஆக்கை முப்பது இல்லையே ஆதி காரணத்திலே
நாக்கை மூக்கையுள் மடித்து நாதநாடியூடு போய்
எக்கருத்தி ரெட்டையும் இறுக்கழுத்த வல்லிரே
பார்க்க பார்க்க திக்கெல்லாம் பரப்பிரம்மம் ஆகுமே!!