Sidhariyal
சிவவாக்கியம்
சிவவாக்கியம் பாடல் 232 – எள் இரும்பு
232. எள் இரும்பு கம்பிளி, இடும்பருத்தி வெண்கலம், அள்ளி உண்ட நாதனுக்கோர் ஆடை மாடை வச்திரம், உள்ளிருக்கும் வேதியர்க்கு உற்றதான ஈதீரேல், மெல்ல வந்த நோயனைத்தும் மீண்டிடும் சிவாயமே!
சிவவாக்கியம் பாடல் 231 – ஆடு நாடு
231. ஆடு நாடு தேடினும். ஆனை சேனை தேடினும், கோடி வாசி தேடினும், குறுக்கே வந்து நிற்குமோ? ஓடி இட்ட பிச்சையும், உகந்து செய்த தர்மமும், சாடி விட்ட குதிரை போல தர்மம் வந்து நிற்குமே!
சிவவாக்கியம் பாடல் 231 – கண்ணிலே இருப்பனே
231. கண்ணிலே இருப்பனே, கருங்கடல் கடைந்த மால், வின்னிலே இருப்பனே, மேனி அங்கு நிற்பனே! தன்னுளே இருப்பனே ! தராதலம் படைத்தவன், என்னுலே இருப்பனே எங்குமாகி நிற்பனே!
சிவவாக்கியம் பாடல் 230 – பிறப்பதும் இறப்பதும்
230. பிறப்பதும் இறப்பதும் பிறந்திடாது இருப்பதும், மறப்பது, நினைப்பது மறந்ததை தெளிந்ததும், துறப்பதும், தொடுப்பதும், சுகித்து வாரி உண்பதும், பிறப்பதும், இறப்பதும் பிறந்து வீடடங்குமே!
சிவவாக்கியம் பாடல் 229 – அருவாமாய் இருந்த
229. அருவாமாய் இருந்த போது, உன்னை அன்று அறிந்திலேன். உருவமாய் இருந்த போது உன்னை நான் அறிந்தனன். உருவினால் தெளிந்து கொண்டு கோதிலாத ஞானமாம், பருவமான போதலோ பரப்பிரம்மம் ஆனதே!.
சிவவாக்கியம் பாடல் 228 – நாலதான யோனியுள்
228. நாலதான யோனியுள், நவின்று நின்று ஒன்றதாய், ஆறதான வித்துலே அமர்ந்து ஒடுங்குமாறு போல், சூலதான உட் பலன் சொல்வதான மந்திரம், மேலதான ஞானிகாள் விரித்துரைக்க வேணுமே!.
சிவவாக்கியம் பாடல் 227 – பண்ணி வைத்த
227. பண்ணி வைத்த கல்லையும் பழம் பொருளதென்று நீர் எண்ணமுற்று என்ன பேர் உரைக்கிறீர்கள் ஏழைகாள் . பண்ணவும் படைக்கவும் படைத்து வைத்து அழிக்கவும் ஒண்ணுமாகி உலகளித்த வொன்றை நெஞ்சிலுண்ணுமே.
சிவவாக்கியம் பாடல் 225 – அண்டம் ஏழும்
225. அண்டம் ஏழும் உழலவே, அனந்த யோனி உழலவே’ பண்டை மால் அயனுடன் பரந்து நின்று உழலவே, எண் திசை கடந்து நின்று இருண்ட சக்தி உழலவே , அண்டரண்டம் ஒன்றதாய் ஆதி நட்டம் ஆடுமே:
சிவவாக்கியம் பாடல் 224 – நல்ல மஞ்சனங்கள்
224. நல்ல மஞ்சனங்கள் தேடி நாடி ஆடி ஓடுறீர். நல்ல மஞ்சனங்கள் உண்டு நாதனுண்டு நம்முளே. எல்லை மஞ்சனங்கள் தேடி ஏக பூசை பண்ணினால், தில்லை மேவு சீவனும் சிவ பதத்துள் ஆடுமே!
சிவவாக்கியம் பாடல் 223 – விழித்த கண்
223. விழித்த கண் குவித்த போது, அடைந்த ஓர் எழுத்தெலாம் , விளைந்து விட்ட இந்திரசால வீடதான வெளியிலே, அழுத்தினாலும் மதிமயங்கி அனுபவிக்கும் வேளையில் அவனுமுண்டு நானுமில்லை யாருமில்லை யானதே!
சிவவாக்கியம் பாடல் 222 – சூழித்தோர் எழுத்தை
222. சூழித்தோர் எழுத்தை உன்னி சொல்லு நாடி ஊடு போய். துன்பம் இன்பமும் கடந்து சொல்லு நாடி ஊடு போய். அழுத்தமான அக்கரத்தின் அங்கியை எழுப்பியே ! ஆறு பங்கையும் கடந்து அப்புறத்து வெளியிலே.
சிவவாக்கியம் பாடல் 221 – வானிலாதது ஒன்றுமில்லை
221. வானிலாதது ஒன்றுமில்லை வானுமில்லை வானிடில் ஊனிலாதது ஒன்றுமில்லை ஊனுமில்லை ஊனிடில் நாணிலாதது ஒன்றுமில்லை நானுமில்லை நண்ணிடில் தானிலாதது ஒன்றுமே தயங்கி ஆடுகின்றதே