Sidhariyal
சிவவாக்கியம்
சிவவாக்கியம் பாடல் 182 – ஆதி அந்தம்
182. ஆதி அந்தம் மூல விந்து நாதம் ஐந்து பூதமாய். ஆதி அந்தம் மூல விந்து நாதம் ஐந்து எழுத்துமாய். ஆதி அந்தம் மூல விந்து நாதமேவி நின்றதும், ஆதி அந்த மூல விந்து நாதமே சிவாயமே!
சிவவாக்கியம் பாடல் 181 – ஒரேழுத்து உலகெலாம்
181. ஒரேழுத்து உலகெலாம் உதித்த அவ் அட்சரத்துளே ஈரெழுத்து இயம்புகின்ற இன்பமேது அறிகிலீர் மூவெழுத்து மூவராய் மூண்டெழுந்த மூர்த்தியை, நாளேழுத்து நாவிலே நவின்றதே சிவாயமே!
சிவவாக்கியம் பாடல் 180 – உருவம் அல்ல
180. உருவம் அல்ல ஒலியும் அல்ல ஒன்றதாகி நின்றதே. மருவும் அல்ல கந்தம் அல்ல மந்த நாடி உற்றதல்ல பெரியதல்ல சிறியதல்ல பேசும் ஆவி தானும் அல்ல அரியதாக நின்ற நேர்மை யாவர் காண வல்லிரே.
சிவவாக்கியம் பாடல் 179 – மனத்தகத்து அழுக்கறாத
179. மனத்தகத்து அழுக்கறாத மவுன ஞான யோகிகள், வனத்தகத்து இருக்கினும் மனத்தகத் அழுக்கறார். மனத்தகத்து அழுக்கருத்த மவுன ஞானி யோகிகள் முலைத்தடத்து இருக்கினும் பிறப்பறுத்து இருப்பரே!
சிவவாக்கியம் பாடல் 178 – நல்ல வெள்ளி
178. நல்ல வெள்ளி ஆறதாய், நயந்த செம்பு நால தாய், சொல்லு நாகம் மூன்ற தாய், குலாவு செம்பொன் இரண்டதாய், வில்லின் ஓசை ஒன்றுடன், இனங்க ஊத வல்லீரேல், எல்லையற்ற சோதியானை எட்டுமாற்றல்லாகுமே!
சிவவாக்கியம் பாடல் 177 – கோயில் பள்ளி
177. கோயில் பள்ளி ஏதடா? குறித்து நின்ற தேதடா? வாயினால் தொழுது நின்ற மந்திரங்கள் ஏதடா? ஞானமான பள்ளியில் , தன்மையாய் வணங்கினால், காயமான பள்ளியில் காணலாம் இறையையே !
சிவவாக்கியம் பாடல் 176 – வட்டமான கூட்டிலே
176. வட்டமான கூட்டிலே படர்ந்தெழுந்த அம்பு நீ , சட்டமீ படத்திலே சங்கு சக்கரங்களாய் விட்டது அஞ்சு வாசலில் கதவினால் அடைத்த பின், முட்டையில் எழுந்த சீவன் விட்டு வாரதெங்கனே.
சிவவாக்கியம் பாடல் 175 – நட்ட தாவரங்களும்
175. நட்ட தாவரங்களும், நவின்ற சாத்திரங்களும், இட்டமான ஓம குண்ட இசைந்த நாலு வேதமும். கட்டி வைத்த புத்தகம், கடும் பிதற்றிதற்கெலாம், பெட்டதாய் முடிந்ததே பிரானை யான் அறியவே!.
சிவவாக்கியம் பாடல் 174 – ஒன்றும் ஒன்று
174. ஒன்றும் ஒன்று ஒன்றுமே உலகனைத்தும் ஒன்றுமே! அன்றும் இன்றும் ஒன்றுமே! அனாதியானது ஒன்றுமே! கண்றள் நின்ற செம்பொன்னை களிம்பறுத்து நாட்டினால், அன்று தெய்வம் உம்முளே அறிந்ததே சிவாயமே…
சிவவாக்கியம் பாடல் 173 – முத்தனாய் நினைந்தபோது
173. முத்தனாய் நினைந்தபோது முடிந்த அண்ட உச்சிமேல், அர்த்தநாரும் அம்மையும் பரிந்து பாடல் ஆடினார். சித்தரான ஞானிகாள் தில்லை ஆடல் என்பீர்காள். அர்த்த நாடலுற்ற போது அடங்கலாடல் உற்றதே.
சிவவாக்கியம் பாடல் 172 – நானிருந்து மூல
172. நானிருந்து மூல வங்கி தணழெழுப்பி வாயுவால், தேனிருந்து வறை திறந்து சித்தி ஒன்றும் ஒத்ததே. வானிருந்த மதியில் மூன்று மண்டலம் புகுந்த பின், கூட இருந்து களவு கண்ட யோகி நல்ல யோகியே!.
சிவவாக்கியம் பாடல் 171 – திரும்பி ஆடு
171. திரும்பி ஆடு வாசலெட்டு , திறம் உறைத்த வாசல் எட்டு. மருங்கிலாத கோலம் எட்டு, வன்னி ஆடு வாசல் எட்டு. துரும்பில்லாத கோலம் எட்டு , சுற்றி வந்த மறுவரே. அரும்பிலாத பூவும் உண்டு ஐயன் ஆனை உண்மையே!