சிவவாக்கியம் பாடல் 170 – உதிக்கும் என்ற
170. உதிக்கும் என்ற தெவ்விடம் ? ஒடுங்குகின்ற தெவ்விடம்?
கதிக்கு நின்ற தெவ்விடம் ? கண்ணுறக்கம் எவ்விடம் ?
மதிக்க நின்ற தெவ்விடம் ? மதிமயக்கம் yஎவ்விடம்?
விதிக்க வல்ல ஞானிகாள் விரித்துரைக்க வேணுமே!
சிவவாக்கியம் பாடல் 167 – அங்கலிங்க பீடமாய்
167. அங்கலிங்க பீடமாய், ஐயிரண்டு எழுத்திலும்,
பொங்கு தாமரையினும் பொருந்துவார் அகத்தினும்,
பங்கு கொண்ட சோதியும், பரந்த அஞ்செழுத்துமே
சங்கு நாத ஓசையும், சிவாயம் அல்லதில்லையே!.
சிவவாக்கியம் பாடல் 166 – கோசமாய் எழுந்ததும்
166. கோசமாய் எழுந்ததும், கூடுறுவி நின்றதும்,
தேகமாய் பிறந்ததும், சிவாய அஞ்செழுத்துமே!
ஈசனார் இருந்திடம், அநேக அநேக மந்திரம்.
ஆசனம் நிறைந்து நின்ற 51 எழுத்துமே.
சிவவாக்கியம் பாடல் 166 – கோசமாய் எழுந்ததும்
166. கோசமாய் எழுந்ததும், கூடுருவி நின்றதும்,
தேகமாய் பிறந்ததும், சிவாய அஞ்செழுத்துமே !
ஈசனார் அருந்திட, அநேக அநேக மந்திரம்,
ஆசனம் நிறைந்து நின்ற , ஐம்பத்தோரு எழுத்துமே !
சிவவாக்கியம் பாடல் 165 – நாலொடாறு பத்து
165. நாலொடாறு பத்து மேல், நாலும் மூன்றும் இட்டபின்,
மேலும் பத்தும் ஆறுடன் , மேவி அண்ட தொன்றுமே!
கூவி அஞ்செழுத்துலே, குரு விருந்து கூறிடில்
தோலு மேனி நாதமாய் தோற்றி நின்ற கோசமே!
சிவவாக்கியம் பாடல் 164 – சதுரம் நாலு
164. சதுரம் நாலு மறையும் இட்டு, தான தங்கி மூன்றுமே!..
எதிரான வாயுவாறு என்னும் வட்ட மேவியே.
உதிரந்தான் மறைகள் எட்டும் என்னும் என் சிரசின் மேல்|
கதிரதான காயத்தில் கலந்தெழுந்த நாதமே!
சிவவாக்கியம் பாடல் 163 – ஓடி ஓடி
163. ஓடி ஓடி பாவிழைத்து உள்ளங்கால் வெளுத்ததும்,
பாவியான பூனை வந்து பாவிலே குதித்ததும், பணிக்கன் வந்து பார்த்ததும், பாரமில்லை என்றதும்,
இழையறுந்து போனதும், என்ன மாயம் ஈசனே ?.
சிவவாக்கியம் பாடல் 162 – கருத்தரிக்கும் முன்னெலாம்
162. கருத்தரிக்கும் முன்னெலாம், காயம் நின்ற தேயுவில்.
உருத்தரிக்கும் முன்னெலாம், உயிர்ப்பு நின்றது அப்புவில்.
அருள்தரிக்கும் முன்னெலாம் ஆசை நின்ற வாயுவில்
திருக்கருத்துக் கொண்டத சிவாயம் என்று கூறுமே !.
சிவவாக்கியம் பாடல் 161 – கருத்தரிக்கும் முன்னெலாம்
161. கருத்தரிக்கும் முன்னெலாம், காயம் நின்றது எவ்விடம்.?
உருத்தரிக்கும் முன்னெலாம், உயிர்ப்பு நின்றது எவ்விடம்.?
அருள்தரிக்கும் முன்னெலாம் ஆசை நின்றது எவ்விடம்?
திருக்கருத்துக் கொண்டதோ? சிவாயம் என்று கூறுவீர்.
சிவவாக்கியம் பாடல் 160 – நெற்றியில் இயங்குகின்ற
160. நெற்றியில் இயங்குகின்ற நீளமாம் விளக்கினை,
உய்த்துணர்ந்து பாரடா, உள்ளிருந்த சோதியை,
பக்தியில் தொடர்ந்தவர், பரமபதம் அதானவர், அத்தலத்தில் இருந்த பேர்கள், அவர் எனக்கு நாதனே !
சிவவாக்கியம் பாடல் 159 – நீரையள்ளி நீரில்விட்டு
159. நீரையள்ளி நீரில்விட்டு நீநினைத்த காரியம்
ஆரையுன்னி நீரெலா மவத்திலே யிறைக்கிறீர்
வேரையுன்னி வித்தையுன்னி வித்திலே முளைத்தெழுந்த
சீரையுன்ன வல்லிரேல் சிவபதங்கள் சேரலாம்.
சிவவாக்கியம் பாடல் 158 – நெத்திபத்தி உழலுகின்ற
158. நெத்திபத்தி உழலுகின்ற நீலமா விளக்கினைப்
பத்தியொத்தி நின்றுநின்று பற்றறுத்தது என்பலன்
உற்றிருந்து பாரடா உள்ளொளிக்கு மேலொளி
அத்தனார் அமர்ந்திடம் அறிந்தவன் அனாதியே.