சிவவாக்கியம் பாடல் 120 – மின் எழுந்து
120. மின் எழுந்து, மின் பரந்து, மின் ஒடுங்கும் வாறு போல் ,
என்னுள் நின்ற என்னுள் ஈசன், என்னுளே அடங்குமே!
கண்ணுள் நின்ற கண்ணின் நேர்மை, கண் அறிவிலாமையால்,
என்னுள் நின்ற என்னை அன்றி யான் அறிந்ததில்லையே!
சிவவாக்கியம் பாடல் 119 – மூலமான மூசசத்தில்
119. மூலமான மூசசத்தில் , மூசசறிந்து விட்ட பின்.
நாலு நாளும் உன்னில் ஒரு நாட்டமாக நாட்டிடில்,
பாலனாகி நீடலாம், பரப்பிரம்மம் ஆகலாம்.
ஆலம் உண்ட கண்டர் ஆனை அம்மை ஆனை உண்மையே!.
சிவவாக்கியம் பாடல் 118 – விண் கடந்து
118. விண் கடந்து நின்ற சோதி, மேலை வாசலைத் திறந்து.
கண் களிக்க உள்ளுலே, கலந்து புக்கிருந்த பின்.
மண் பிறந்த மாயமும், மயக்கமும் மறந்து போய்.
எண் கலந்த ஈசனோடு இசைந்து இருப்பது உண்மையே!
சிவவாக்கியம் பாடல் 117 – விண்ணில் உள்ள
117. விண்ணில் உள்ள தேவர்கள் அறியொனாத மெய்ப்பொருள்.
கண்ணில் ஆணி ஆகவே கலந்து நின்ற எம்பிரான்.
மண்ணிலாம் பிறப்பறுத்து, மலரடிகள் வைத்த பின்,
அன்னலாரும் எம்முளே அமர்ந்து வாழ்வது உண்மையே !
சிவவாக்கியம் பாடல் 116 – நெட்டெழுத்து வட்டமோ?
116. நெட்டெழுத்து வட்டமோ? நிறைந்த பல்லி யோனியும்.
நெட்டெழத்தில் வட்டம் ஒன்று, நின்றதொன்று கண்டிலேன்.
குட்டெழத்தில் உற்றதென்று , கொம்பு கால் குறித்திடில்,
நெட்டெழத்தின் வட்டம் ஒன்றில் நேர் படான் நம் ஈசனே.
சிவவாக்கியம் பாடல் 115 – உயிர் நன்மையால்
115. உயிர் நன்மையால், உடல் எடுத்து வந்து இருந்திடும்.
உயிர் உடம்பு ஒழிந்த போது, ரூபம் ரூபம் ஆயிடும்.
உயிர் சிவத்தின் மாய்கை ஆகி, ஒன்றை ஒன்றை கொன்றிடும்.
உயிரும் சக்தி மாய்கை ஆகி ஒன்றை ஒன்று தின்னுமே !
சிவவாக்கியம் பாடல் 114 – நீடு பாரிலே
114. நீடு பாரிலே பிறந்து , நேயமான காயந்தான்.
வீடு வேறு இதென்ற போதும், வேண்டி இன்பம் வேண்டுமோ?
பாடி நாலு வேதமும், பாரிலே படர்ந்ததோ?
நாடு ராம ராம ராம ராம என்னும் நாமமே!
சிவவாக்கியம் பாடல் 113 – கார கார
113.கார கார கார கார காவல் ஊழி காவலன்.
போர போர போர போர போரில் நின்ற புண்ணியன்.
மாற மாற மாற மாற மறங்கள் ஏழம் எய்து. சீ
ராம ராம ராம ராம என்னும் நாமமே !
சிவவாக்கியம் பாடல் 112 – இல்லை இல்லை
112. இல்லை இல்லை இல்லை என்று இயம்புகின்ற ஏழைகாள்.
இல்லை என்று நின்ற தொன்றை, இல்லை என்னலாகுமோ?
இல்லை அல்ல அது ஒன்றுமல்ல, இரண்டும் ஒன்றி நின்றதை,
எல்லை கண்டு கொண்ட பேர், இனி பிறப்பதில்லையே !
சிவவாக்கியம் பாடல் 111 – வீடு எடுத்து
111. வீடு எடுத்து வேள்வி செய்து, மெய்யரோடு பொய்யுமாய்.
மாடு மக்கள் , பெண்டிர் , சுற்றம் , என்றிருக்கும் மாந்தர்காள்.
நாடு பெற்ற நண்பர் கையில் ஓலை வந்து, அழைத்த போது.
ஆடு பெற்றது அவ் விலை , பெறாது காணும் இவ்வுடல்.
சிவவாக்கியம் பாடல் 110 – நாவில் நூல்
110.நாவில் நூல் அழிந்ததும், நலம் குலம் அழிந்ததும்,
மேவு தேர் அழிந்ததும், விசாரம் குறைந்ததும்,
பாவிகாள், இதென்ன மாயம் ? வாம நாடு பூசலாய் ,
ஆவியார் அடங்கு நாளில், ஐவரும் அடங்குவார்!.
சிவவாக்கியம் பாடல் 109 – மண் கிடாரமே
109.மண் கிடாரமே சுமந்து, மலையில் ஏறி மறுகுறீர்,
எண் படாத காரியங்கள் இயலும் என்று கூறுவீர்.
தம்பிரானை, நாள்கள் தோறும், தரையிலே தலை பட.
கும்பிடாத மாந்தரோடு, கூடி வாழ்வது எங்கனே?