சிவவாக்கியம் பாடல் 108 – பாரடங்க உள்ளதும்
108. பாரடங்க உள்ளதும், பரந்த வானம் உள்ளதும்,
ஓரிடமும் இன்றியே, ஒன்றி நின்ற உன் சுடர்,
ஆரிடமும் அன்றியே , அகத்துள்ளும், புறத்துள்ளும்,
சீரிடங்கள் கண்டவர் , சிவன் தெரிந்த ஞானியே!
சிவவாக்கியம் பாடல் 107 – மலர்ந்த தாது
107. மலர்ந்த தாது மூலமாய் வையகம் மலர்ந்ததும்,
மலர்ந்த பூ மயக்கம் வந்து, அடுத்ததும், விடுத்ததும்,
புலன்கள் ஐந்தும் பொறி கலங்கி, பூமி மேல் விழுந்ததும்.
இனங்கலங்கி நின்ற மாயம் என்ன மாயம் ஈசனே ?
சிவவாக்கியம் பாடல் 106 – ஆதியானது ஒன்றுமே
106. ஆதியானது ஒன்றுமே, அனேக அனேக ரூபமாய்,
சாதி பேதமாய் எழுந்து, சர்வ சீவன் ஆனபின்,
ஆவியோடு ஆடுகின்ற , மீண்டும் அந்த சென்மமாம்,
சோதியான ஞானியாகி சுத்தமாய் இருப்பரே !
சிவவாக்கியம் பாடல் 105 – அல்லல் வாசல்
105. அல்லல் வாசல் ஒன்பதும், அறுத்தடைந்த வாசலும்,
சொல்லும் வாசல் ஓர் ஐந்தும், சொம்மி விம்மி நின்றதும்.
நல்ல வாசலைக் திறந்து, ஞான வாசல் ஊடு போய்,
எல்லை வாசல் கண்டவர், இனி பிறப்பதில்லையே!.
சிவவாக்கியம் பாடல் 104 – ஓம் நமசிவாயமே
104. ஓம் நமசிவாயமே , உணர்த்தும் மெய் உணர்ந்த பின்,
ஓம் நமசிவாயமே, உணர்ந்து மெய் தெளிந்த பின்,
ஓம் நமசிவாயமே, உணர்ந்து மெய் உணர்ந்த பின்,
ஓம் நமசிவாயமே, உட்கலந்து நிற்குமே!
சிவவாக்கியம் பாடல் 103 – விழியினோடு புனல்
103. விழியினோடு புனல் விளைந்த வில்லவல்லி யோனியும்
வெளியிலே பிதற்றலாம், விளைவு நின்றதில்லையே!
வெளி பறந்த தேகமும், வெளிக்குள் மூல வித்தையும்,
தெளியும் வல்ல ஞானிகள், தெளிந்திருத்தல் தின்னமே !.
சிவவாக்கியம் பாடல் 102 – ஒளியதான காசி
102. ஒளியதான காசி மீது வந்து தங்குவோர்க் கெல்லாம்,
வெளியதான சோதி மேனி, விசுவநாதனானவன்.
தெளியு கங்கை (மங்கை) உடனிருந்து செப்புகின்ற தாரகம்,
வெளிய தோரி ராம ராம ராமமிர்த நாமமே!.
சிவவாக்கியம் பாடல் 101 – பச்சை மண்
101. பச்சை மண் பதுப்பிலே, புழ பதித்த வேட்டுவன்,
நித்தமும் நினைத்திட , நினைந்த வண்ணம் ஆகிடும்,
பச்சை மண் இடிந்து போய், பறந்த தும்பி ஆயிடும்.
பித்தர் கால் அறிந்து கொள்க , பிராண் இருந்த கோலமே!.
சிவவாக்கியம் பாடல் 100 – பரம் உனக்கு
100. பரம் உனக்கு , எனக்கு வேறு பயமிலை பரா பரா !
கரம் எடுத்து நிற்றலும், குவித்திடக் கடவதும்,
சிரம் உறுக்கி அழுதளித்து சீருளாவும் நாதனே,
வரம் (உறம்) எனக்கு நீ அளித்த ஓம் நமசிவாயமே!
சிவவாக்கியம் பாடல் 99 – நமசிவாய அஞ்செழுத்தும்
99. நமசிவாய அஞ்செழுத்தும், நிற்குமே நிலைகளும்,
நமசிவாய அஞ்சும் அஞ்சும், புராணமான மாய்கையும்,
நமசிவாய மஞ்செழுத்தும் , நம்முளே இருக்கவே!
நமசிவாய உண்மையை, நன்கு உரை செய் நாதனே.
சிவவாக்கியம் பாடல் 98 – பேசுவானும் ஈசனே
98. பேசுவானும் ஈசனே, பிரம்ம ஞானம் உம்முளே!
ஆசையான ஐவரும், அலைந்து அலைகள் செய்கிறார்,
ஆசையான ஐவரை அடக்கி ஓர் எழுத்திளே,
பேசிடாது இருப்பரேல் நாதம் வந்து ஒலிக்குமே!.
சிவவாக்கியம் பாடல் 97 – வட்டம் என்று
97. வட்டம் என்று உம்முளே மயக்கி விட்டது இவ்வெளி,
அட்டரக் கரத்துளே, அடக்கமும், ஒடுக்கமும்,
எட்டும் எட்டும் எட்டுமாய், இயங்கு சக்கரத்துளே,
எட்டலாம் உதித்த எம்பிரானை நாமறிந்த பின்.