சிவவாக்கியம் பாடல் 292 – குண்டலத்து உள்ளே
292. குண்டலத்து உள்ளே உள்ளே, குறித்தகத்து நாயகன்.
கண்ட வந்த மண்டலம், கருத்தளித்த கூத்தனை,
விண்டலர்ந்த சந்திரன், விளங்குகின்ற மெய்ப்பொருள்,
கண்டு கொண்ட மண்டலம் சிவாயம் , அல்லதில்லையே!.
சிவவாக்கியம் பாடல் 291 – சுக்கிலத்தடியுலே ! சுழித்ததோர்
291. சுக்கிலத்தடியுலே ! சுழித்ததோர் எழுத்துலே!
அக்கரத்தடியுலே! அமர்ந்த ஆதி சோதி நீ !
உக்கரதடியுளே! உணர்ந்த அஞ்செழுத்துளே!
அக்கரம் அதாகியே ! அமர்ந்ததே சிவாயமே!
சிவவாக்கியம் பாடல் 290 – மூல வாசல்
290. மூல வாசல் மீதுலே , ஓர் முச்சதுரம் ஆகியே!
நாலு வாசல் எண் விரல் , நடு உதித்த மந்திரம்.
கோலம் ஒன்றும் அஞ்சுமாம், இங்கலைந்து நின்ற நீ,
வேறு வேறு கண்டிலேன் விளைந்ததே! சிவாயமே.
சிவவாக்கியம் பாடல். 290 – ஆகமத்தின் உட்பொருள்
290. ஆகமத்தின் உட்பொருள்
அகண்ட மூலம் ஆதலால்,
தாக, போக மின்றியே தரித்ததற் பரமும் நீ,
ஏக பாதம் வைத்து எனை உணர்த்தும் ஐஞ்செழுத்துலே !
ஏக போகம் ஆகியே இருந்ததே சிவாயமே!
சிவவாக்கியம் பாடல். 289 – அக்கரந்த அக்கரத்தில்
289. அக்கரந்த அக்கரத்தில் உட்கரந்த அக்கரம்.
சக்கரத்து சிவ்வை உண்டு செம்புலத்திருந்ததும்,
செக்கரந்த எண்ணெய் போல் எவ்வெழுத்தும் எம்பிராண்,
உட்கரந்து நின்ற நேர்மை, யாவர் காண வல்லரே?
சிவவாக்கியம் பாடல் 288 – அஞ்சு கோடி
288. அஞ்சு கோடி மந்திரம், அஞ்சுலே அடங்கினால்,
நெஞ்சு கூற உம்முளே, நினைப்பதோர் எழுத்துளே,
அஞ்சு நாலு மூன்றதாகி உம்முளே அடங்கினால்,
அஞ்சும் ஓர் எழுத்ததாய் அமைந்ததே சிவாயமே!.
சூரிய உதயம், காலையில் , பௌர்ணமி அன்று உதயம் மாலையில், இரண்டையும். , கவனித்தால்,
சூரிய உதயம், காலையில் , பௌர்ணமி அன்று உதயம் மாலையில், இரண்டையும். , கவனித்தால், , இரண்டும் இப்பொழது சூரியன் தெற்கேயும் , நிலா வடக்கேயும் உதிக்கும். இது அடுத்த பெளர்ணமி அன்று குச்சிக்கு அருகே ஒன்றை யொன்று நெருங்கும், March – 22 (…
சிவவாக்கியம் பாடல் 282 – ஈருளிய திங்களே
282. ஈருளிய திங்களே இயங்கிநின்ற தற்பரம்.
பேரொளிய திங்களே யாவரும் அறிகிலீர் .
காரொழிய படலமும், கடந்துபோன தற்பரம்.
பேரொலிப் பெரும்பதமும், ஏகநாத பாதமே.
சிவவாக்கியம் பாடல் 281 – அம்பரத்துள் ஆடுகின்ற
281. அம்பரத்துள் ஆடுகின்ற அஞ்செழுத்து நீயலோ?
சிம்புலாய் பறந்து நின்ற சிற்பரமும் நீயலோ?
எம்பிரானும் எவ்வுயிர்க்கும், ஏக போகம் ஆதலால்,
எம்பிரானும், நானுமாய் இருந்ததே சிவாயமே!
சிவவாக்கியம் பாடல் 280 – பொருந்து நீரும்
280. பொருந்து நீரும் உம்முளே! புகுந்து நின்ற காரணம்,
எருதிரண்டு கன்றை ஈன்ற ஏகம் ஒன்றை ஓர்கிலீர்.
அருகிருந்து சாவுகின்ற யாவையும், அறிந்திலீர்.
குருவிருந்து உலாவுகின்ற கோலம் என்ன கோலமே!.
சிவவாக்கியம் பாடல் 279 – நின்றதன்று, இருந்ததன்று
279. நின்றதன்று, இருந்ததன்று, நேரிதன்று, கூறிதன்று,
பந்தமன்று, வீடுமன்று, பாவங்கள் அற்றது.
கந்தமன்று, கேள்வி அன்று, கேடிலாத வானிலே,
அந்தமின்றி நின்ற தொன்றை , எங்ஙனே உரைப்பது.
சிவவாக்கியம் பாடல் 278 – வண்டுலங்கு போலு
278. வண்டுலங்கு போலு நீர் மனத்து மாசு அறுக்கிலீர்.
குண்டலங்கள் போலு நீர் குளத்திலே முழுகிறீர்.
பண்டும் உங்கள் நான்முகன் பறந்து தேடி காண்கிலான்.
கண்டிருக்கும் உம்முளே கலந்திருப்பர் காணுமே !