சிவவாக்கியம் பாடல் 277 – முச்சதுரம் மூலமாகி
277. முச்சதுரம் மூலமாகி முடிவுமாகி ஏகமாய்.
அச்சதுரம் ஆகியே அடங்கி ஓர் எழுத்துமாய்.
மெய்ச்சதுரம் மெய்யுளே விளங்கு ஞான தீபமாய்.
உச்சரிக்கும் மந்திரத்தின் உண்மையே சிவாயமே!
சிவவாக்கியம் பாடல் 276 – மூலமான அக்கரம்
276. மூலமான அக்கரம் முகப்பதற்கு முன்னெலாம்,
மூலமாக மூடுகின்ற மூடமேது மூடரே!
காலனான அஞ்சு பூதம் அஞ்சிலே ஓடுங்கினால்,
ஆதியோடு. கூடுமோ!? அனாதியோடு கூடுமோ?
சிவவாக்கியம் பாடல் 275 – அணுவினோடும் அண்டமாய்
275. அணுவினோடும் அண்டமாய், அளவிடாத சோதியை!
குணமதாகி உம்முளே, குறித்திருக்கில் முக்தியாம்.
முனு முனென்று உம்முளே! விரலை ஊன்றி மீளவும்,
தினம் தினம் மயக்குவீர் செம்பு பூசை பண்ணியே !
சிவவாக்கியம் பாடல் 274 – பத்தொடற்ற வாசலில்
274. பத்தொடற்ற வாசலில் பரந்து மூல அக்கரம்,
முத்தி சித்தி, சொந்தமின்றி இயக்குகின்ற மூலமே!
மத்த சித்த ஐம்புலன் மகாரமான கூத்தையே!.
அத் தீ ஊற தம்முளே அமைந்ததே! சிவாயமே !
சிவவாக்கியம் பாடல் 273 – நீரிலே பிறந்திருந்து
273. நீரிலே பிறந்திருந்து நீர் சடங்கு செய்கிறீர்!
யாரை உண்ணி நீரெலாம் அவத்திலே இறைக்கிறீர்?
வேரை உண்ணி வித்தை உண்ணி வித்திலே முலைத்தெழும்,
சீரை உண்ண வல்லீரேல் சிவபதம் அடைவீரே!
சிவவாக்கியம் பாடல் 272 – கயத்து நீர்
272. கயத்து நீர் இறைக்கிறீர் , கைகள் சோர்ந்து நிற்பதேன்?
மனத்துளீர் ஒன்றிலாத மதியிலாத மாந்தர்காள்,
மனத்துள ஈறம் கொண்டு நீர் அழுக்கருக்க வல்லீரேல் !
நினைப் பிரிந்த சோதியும், நீயும் நானும் ஒன்றலோ!
சிவவாக்கியம் பாடல் 271 – ஏழுபார் எழு
271.ஏழுபார் எழு கடல் இடங்கள் எட்டு வெற்புடன்,
சூழுவான் கிரி கடந்து சொல்லு மேல் உலகமும்
ஆழி மால் விசும்பு கொள் பிரமாண்டரண்ட அவ் அண்டமும்
ஊழியான ஒளிக்குளே உதித்துடன் ஒடுக்குமே!
சிவவாக்கியம் பாடல் 271 – ஆவதும் பரத்துளே
271 ஆவதும் பரத்துளே, அழிவதும் பரத்துளே,
போவதும் பரத்துளே. புகுவதும் பரத்துளே,
தேவரும் பரத்துளே , திசைகளும் பரத்துளே,
யாவரும் பரத்துளே, யானும் அப் பரத்துளே.
சிவவாக்கியம் பாடல் 270 – ஆடுகின்ற அண்டர்கூடும்
270. ஆடுகின்ற அண்டர்கூடும் அப்புறம், அது இப்புறம்,
தேடு நாலு வேதமும், தேவரான மூவரும்,
நீடுவாழி பூதமும் ,நின்றதோர் நிலைகளும்,
ஆடுவாளின் ஒலியலாது அனைத்துமில்லை இல்லையே.
சிவவாக்கியம் பாடல் 269 – வயலிலே முளைத்த
269. வயலிலே முளைத்த செந் நெல் கலையதான வாரு போல்,
உலகினோரும் வன்மை கூறி உய்யுமாற தெங்கனே!
விறகிலே முளைத்தெழுந்த மெய் அலாது பொய்யதாய் ,
நரகிலே பிறந்து இருந்து நாடு பட்ட பாடதே!..
சிவவாக்கியம் பாடல் 268 – ஆடுகின்ற எம்பிரானை
268. ஆடுகின்ற எம்பிரானை அங்கும் இங்கும் என்று நீர்.
தேடுகின்ற பாவிகாள், தெளிந்து ஒன்றை ஊர்கிளீர்.
காடு நாடு வீடு வில் கலந்து நின்ற கள்வனை !
நாடி ஓடி உம்முளே நயந்து உணர்ந்து பாருமே!..
சிவவாக்கியம் பாடல் 267 – மச்சகத்துளே இவர்ந்து
267. மச்சகத்துளே இவர்ந்து மாயை பேசும் வாயுவை,
அச்சகத்துளே இருந்து அறிவுணர்த்திக் கொள்வீரேல் !
அச்சகத்துளே இருந்து அறிவுணர்த்திக் கொண்ட பின்.
இச்சையற்ற எம்பிரான் எங்குமாகி நிற்பனே!