Sidhariyal
வலைப்பதிவு
சிவவாக்கியம் பாடல் 313 – ஆதியான ஐம்புலன்கள்

313. ஆதியான ஐம்புலன்கள் அவை உமக்குள் ஒக்குமோ! யோனியில் பிறந்திருந்த துன்பமிக்கும் ஒக்குமோ! வீணர்காள் பிதற்றுவீர் மெய்மையே உணர்கிரேல், ஊணுறக்க போகமும் உமக்கெனக்கும் ஒக்குமே!

சிவவாக்கியம் பாடல் 312 – ஐம்புலனை வென்றவர்க்கிங்கு

312. ஐம்புலனை வென்றவர்க்கிங்கு அன்னதானம் ஈவதாய் , தன் புலன்கள் ஆகி நின்ற நாதருக்கு அது ஏறுமோ? ஐம்புலனை வென்றிடாத அவத்தமே உழன்றிடும், வம்பருக்கும் ஈவதும் , கொடுப்பதும் அவத்தமே!

சிவவாக்கியம் பாடல் 311 – ஓம் நமோ!

311. ஓம் நமோ! என்றுளே பாவை என்று அறிந்த பின், ஆண் உடல் ! கருத்துளே பாவை என்று அறிந்த பின், நானும் நீயும் உண்டடா! நலம் குலம் அது உண்டடா! ஊணும் , ஊணும் ஒன்றுமே உணர்ந்திடா உனக்குளே!

சிவவாக்கியம் பாடல் 310 – விழித்த கண் துதிக்கவும்

310. விழித்த கண் துதிக்கவும், விந்து நாத ஓசையும், மேருவும் கடந்த அண்ட கோளமும் கடந்து போய், எழுத்தெலாம் அழிந்து விட்ட இந்திரஞால வெளியிலே, யானும் நீயுமே கலந்த தென்னதன்மை ஈசனே!

சிவவாக்கியம் பாடல் 309 – இருத்தி வைத்த

309. இருத்தி வைத்த சற்குருவை சீர் பெற வணங்கிலீர். உரு கொடுக்கும் பித்தரே ! கொண்டு நீந்த வல்லீரோ! உருக்கொடுக்கும் பித்தரும்! உருக்குள் வந்த சீடனும், பருத்தி பட்ட பாடுதான் பண்ணிரண்டும் பட்டதே!.

சிவவாக்கியம் பாடல் 308 – உதித்த மந்திரத்தினும்

308. உதித்த மந்திரத்தினும், ஒடுங்கும் அக்கரத்தினும், மதித்த மண்டலத்தினும், மறைந்து நின்ற சோதி நீ ! மதித்த மண்டலத்துளே மரித்து நீ இருந்த பின்! சிரித்த மண்டலத்துலே சிறந்ததே சிவாயமே!

சிவவாக்கியம் பாடல் 307 – ஒடுக்குகின்ற சோதியும்

307. ஒடுக்குகின்ற சோதியும் முந்திநின்ற ஒருவனும், நடுத்தலத்தில் ஒருவனும் நடந்து காலில் ஏறியே, விடுத்து நின்ற இருவரோடு மெய்யினோடு பொய்யுமாய், அடுத்து நின்ற அறுமீனோ , அனாதிநின்ற ஆதியே!.

சிவவாக்கியம் பாடல் 297 – உம்பர் வானகத்தினும்

297. உம்பர் வானகத்தினும் , உலக பாரம் ஏழினும், நம்பர் நாடு தன்னிலும், நாவல் என்ற தீவினும், செம்பொன் மாட மல்குதில்லை அம்பலத்துள் ஆடுவான். எம்பிரான் அலாது தெய்வம் இல்லை இல்லை இல்லையே!

சிவவாக்கியம் பாடல் 296 – மூன்றுபத்து மூன்றையும்

296. மூன்றுபத்து மூன்றையும், மூன்று சொன்ன மூலனே. தோன்று சேர ஞானிகாள், துய்யபாதம் என் தலை, என்று வைத்த வைத்தபின், இயம்பும் அஞ்செழுத்தையும் தோன்ற ஓத வல்லிரேல் ! துய்ய சோதி காணுமே!

சிவவாக்கியம் பாடல் 295 – தத்துவங்க ளென்றுநீர்

295. தத்துவங்க ளென்றுநீர் தமைக்கடிந்து போவிர்காள் தத்துவஞ் சிவமதாகில் தற்பரமும் நீரல்லோ முத்திசீவ னாதமே மூலபாதம் வைத்தபின் அத்தனாரு மும்முளே யறிந்துணர்ந்து கொள்ளுமே.

சிவவாக்கியம் பாடல் 294 – மூலமென்ற மந்திரம்

294. மூலமென்ற மந்திரம் முளைத்த அஞ்செழுத்துளே! நாலுவேதம் நாவுளே நவின்ற ஞானம் மெய்யுளே! ஆலம் உண்ட கண்டனும் அரி அயனும் ஆதலால். ஓலமென்ற மந்திரம் சிவாயம் அல்லதில்லையே.

சிவவாக்கியம் பாடல் 293 – சுற்றுமைந்து கூடமொன்று

293. சுற்றுமைந்து கூடமொன்று சொல்லிறந்த தோர்வெளி சத்தியுஞ் சிவனுமாக நின்றதன்மை யோர்கிலீர் சத்தியாவ தும்முடல் தயங்குசீவ னுட்சிவம் பித்தர்கா ளறிந்திலீர் பிரானிருந்த கோலமே.