Sidhariyal
வலைப்பதிவு
சிவவாக்கியம் பாடல் 292 – குண்டலத்து உள்ளே

292. குண்டலத்து உள்ளே உள்ளே, குறித்தகத்து நாயகன். கண்ட வந்த மண்டலம், கருத்தளித்த கூத்தனை, விண்டலர்ந்த சந்திரன், விளங்குகின்ற மெய்ப்பொருள், கண்டு கொண்ட மண்டலம் சிவாயம் , அல்லதில்லையே!.

சிவவாக்கியம் பாடல் 291 – சுக்கிலத்தடியுலே ! சுழித்ததோர்

291. சுக்கிலத்தடியுலே ! சுழித்ததோர் எழுத்துலே! அக்கரத்தடியுலே! அமர்ந்த ஆதி சோதி நீ ! உக்கரதடியுளே! உணர்ந்த அஞ்செழுத்துளே! அக்கரம் அதாகியே ! அமர்ந்ததே சிவாயமே!

சிவவாக்கியம் பாடல் 290 – மூல வாசல்

290. மூல வாசல் மீதுலே , ஓர் முச்சதுரம் ஆகியே! நாலு வாசல் எண் விரல் , நடு உதித்த மந்திரம். கோலம் ஒன்றும் அஞ்சுமாம், இங்கலைந்து நின்ற நீ, வேறு வேறு கண்டிலேன் விளைந்ததே! சிவாயமே.

சிவவாக்கியம் பாடல். 290 – ஆகமத்தின் உட்பொருள்

290. ஆகமத்தின் உட்பொருள் அகண்ட மூலம் ஆதலால், தாக, போக மின்றியே தரித்ததற் பரமும் நீ, ஏக பாதம் வைத்து எனை உணர்த்தும் ஐஞ்செழுத்துலே ! ஏக போகம் ஆகியே இருந்ததே சிவாயமே!

சிவவாக்கியம் பாடல். 289 – அக்கரந்த அக்கரத்தில்

289. அக்கரந்த அக்கரத்தில் உட்கரந்த அக்கரம். சக்கரத்து சிவ்வை உண்டு செம்புலத்திருந்ததும், செக்கரந்த எண்ணெய் போல் எவ்வெழுத்தும் எம்பிராண், உட்கரந்து நின்ற நேர்மை, யாவர் காண வல்லரே?

சிவவாக்கியம் பாடல் 288 – அஞ்சு கோடி

288. அஞ்சு கோடி மந்திரம், அஞ்சுலே அடங்கினால், நெஞ்சு கூற உம்முளே, நினைப்பதோர் எழுத்துளே, அஞ்சு நாலு மூன்றதாகி உம்முளே அடங்கினால், அஞ்சும் ஓர் எழுத்ததாய் அமைந்ததே சிவாயமே!.

சூரிய உதயம், காலையில் , பௌர்ணமி அன்று உதயம் மாலையில், இரண்டையும். , கவனித்தால்,

சூரிய உதயம், காலையில் , பௌர்ணமி அன்று உதயம் மாலையில், இரண்டையும். , கவனித்தால், , இரண்டும் இப்பொழது சூரியன் தெற்கேயும் , நிலா வடக்கேயும் உதிக்கும். இது அடுத்த பெளர்ணமி அன்று குச்சிக்கு அருகே ஒன்றை யொன்று நெருங்கும், March – 22 (…

சிவவாக்கியம் பாடல் 282 – ஈருளிய திங்களே

282. ஈருளிய திங்களே இயங்கிநின்ற தற்பரம். பேரொளிய திங்களே யாவரும் அறிகிலீர் . காரொழிய படலமும், கடந்துபோன தற்பரம். பேரொலிப் பெரும்பதமும், ஏகநாத பாதமே.

சிவவாக்கியம் பாடல் 281 – அம்பரத்துள் ஆடுகின்ற

281. அம்பரத்துள் ஆடுகின்ற அஞ்செழுத்து நீயலோ? சிம்புலாய் பறந்து நின்ற சிற்பரமும் நீயலோ? எம்பிரானும் எவ்வுயிர்க்கும், ஏக போகம் ஆதலால், எம்பிரானும், நானுமாய் இருந்ததே சிவாயமே!

சிவவாக்கியம் பாடல் 280 – பொருந்து நீரும்

280. பொருந்து நீரும் உம்முளே! புகுந்து நின்ற காரணம், எருதிரண்டு கன்றை ஈன்ற ஏகம் ஒன்றை ஓர்கிலீர். அருகிருந்து சாவுகின்ற யாவையும், அறிந்திலீர். குருவிருந்து உலாவுகின்ற கோலம் என்ன கோலமே!.

சிவவாக்கியம் பாடல் 279 – நின்றதன்று, இருந்ததன்று

279. நின்றதன்று, இருந்ததன்று, நேரிதன்று, கூறிதன்று, பந்தமன்று, வீடுமன்று, பாவங்கள் அற்றது. கந்தமன்று, கேள்வி அன்று, கேடிலாத வானிலே, அந்தமின்றி நின்ற தொன்றை , எங்ஙனே உரைப்பது.

சிவவாக்கியம் பாடல் 278 – வண்டுலங்கு போலு

278. வண்டுலங்கு போலு நீர் மனத்து மாசு அறுக்கிலீர். குண்டலங்கள் போலு நீர் குளத்திலே முழுகிறீர். பண்டும் உங்கள் நான்முகன் பறந்து தேடி காண்கிலான். கண்டிருக்கும் உம்முளே கலந்திருப்பர் காணுமே !