சிவவாக்கியம் பாடல் 78 – கான மற்ற
78. கான மற்ற காட்டகத்தில், வெந்தெழுந்த நீரு போல், ஞானமற்ற நெஞ்சகத்தில், நல்லது ஏதும் இல்லையே! ஊனமற்ற சோதியோடு உணர்வு சேர்ந்து அடக்கினால், தேனகத்தின் ஊரல் போல் தெளிந்ததே சிவாயமே!.
சிவவாக்கியம் பாடல் 77 – மாடு கன்று
77. மாடு கன்று செல்வமும், மனைவி மைந்தர் மகிழவே ! மாட மாளிகை புறத்தில் வாழுகின்ற நாளிலே ! ஓடி வந்து கால தூதர், சடுதியாக மோதவே! உடல் கிடந்து, உயிர் கழன்ற உண்மை கண்டு உணர்கிலீர்?
சிவவாக்கியம் பாடல் 76 – ஒக்கவந்து மாதுடன்
76. ஒக்கவந்து மாதுடன், செறிந்திடத்தில் அழகிய, ஒருவராகி, இருவராகி இளமை பெற்ற ஊரிலே, அஃகனிந்து, கொன்றை சூடும் அம்பலத்தில் ‘ஆடுவார், அஞ்செழுத்தை ஓதிடில் அனேக பாவம் அகலுமே!
சிவவாக்கியம் பாடல் 75 – மிக்கசெல்வன் நீ
75. மிக்கசெல்வன் நீ படைத்த விறகு மேனி பாவிகாள், விறகுடன் கொளுத்தி மேனி , வெந்து போவது அறிகிலீர், மக்கள், பெண்டிர் சுற்றம் என்று மாயை காணும் இவையெலாம், மறலி வந்தழைத்த போது, வந்து கூடலாகுமோ!.
திருக்குறளில் கடவுள் வாழ்த்து 3.ம் பாடல்.
திருக்குறளில் கடவுள் வாழ்த்து 3.ம் பாடல். மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார், நிலமிசை நீடு வாழ்வார்.
சிவவாக்கியம் பாடல் 74 – மண் கலம்
74.மண் கலம் கவர்ந்த போது, வைத்து வைத்து அடுக்குவர். வெண்கலம் கவர்ந்த போது, நாறும் என்று பேணுவார். தன் கலம் கவர்ந்த போது நாறும் என்று போடுவார். என் கலந்து நின்ற மாயம் , என்ன மாயம்? ஈசனே !.
சிவவாக்கியம் பாடல் 73 – மண்ணிலே பிறக்கவும்
73. மண்ணிலே பிறக்கவும், வழக்கலாது உறைக்கவும், எண்ணிலாத கோடி தேவர், என்னது உன்னது என்னவும். கண்ணிலே கண் மனி இருக்க, கண் மறைந்தவாறு போல், எண்ணில் கோடி தேவரும் இதன் கண்ணால் விழிப்பரே.
சிவவாக்கியம் பாடல் 72 – கருக்குழியில் ஆசையாய்
72. கருக்குழியில் ஆசையாய் காதலுற்று நிற்கிறீர், குருக்கெடுக்கும் ஏழைகாள் குலாவுகின்ற பாவிகாள், இருத்துறுத்தி மெய்யினால், சிவந்த அஞ்செழுத்தையும், உருக்கழிக்கும் உம்மையும் , உணர்ந்து உணரநது கொள்ளுதே!
சிவவாக்கியம் பாடல் 71 – திருவரங்கமும், பொருந்தி
71. திருவரங்கமும், பொருந்தி என்புருகி நோக்கிடீர், உருவரங்கம் ஆகி நின்ற உண்மை ஒன்றை ஓர்கிலீர். கருவரங்கம் ஆகி நின்ற கற்பனை கடந்த பின், திருவரங்கம் என்று நீர் தெரிந்து இருக்க வல்லீரேல்.
108 க்கும் நிலாவுக்கும் பூமிக்கும் சூரியனுக்கும் என்ன தொடர்பு?
108 க்கும் நிலாவுக்கும் பூமிக்கும் சூரியனுக்கும் என்ன தொடர்பு. சூரிய முழு கிரகணத்தன்று சூரியனை நிலா முழுதுமாக மறைத்து உடனே விலகுகிறது. இந்த நிகழ்வில் சரியாக நிலவின் வட்டமும், சூரியனின் வட்டமும் பொருந்துகிறது. அதை நாம் பூமிய…
சிவவாக்கியம் பாடல் 70 – அறிவிலே பிறந்திருந்த
70. அறிவிலே பிறந்திருந்த ஆகமங்கள் ஓதுறீர். திரியிலே மயங்குகின்ற நேர்மை ஒன்று அறிகிலீர். உரியிலே தயிர் இருக்க, ஊர் புகுந்து வெண்னை தேடும். அறிவிலாத மாந்தரோடு, அனுகுமாற தெங்கனே !
சிவவாக்கியம் பாடல் 69 – ஆத்துமா அநாதியோ?
69. ஆத்துமா அநாதியோ? அநாத்துமா அநாதியோ? பூத்திருந்த ஐம்பொறி, புலன்களும் அநாதியோ? தாக்கம் மிக்க நூல்களும், சதாசிவம் அநாதியோ? வீக்க வந்த யோகிகாள், விரைந்துரைக்க வேணுமே?.