Sidhariyal
வலைப்பதிவு
சிவவாக்கியம் பாடல் 89 – அவ்வுதித்த மந்திரம்

89. அவ்வுதித்த மந்திரம் மகாரமாய், உகாரமாய். எவ்வெழுத்து அறிந்தவர்க்கு , எழு பிறப்பு தீங்கில்லை ? சவ்வுதித்த மந்திரத்தை, தற்பரத்தில் இருத்தினால். அவ்வும், உவ்வும், மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே!.

சிவவாக்கியம் பாடல் 88 – ஆல வித்தில்

88. ஆல வித்தில் ஆல் ஒடுங்கி , ஆலமான வாறு போல். வேறு வித்தும் இன்றியே, விளைந்து போகம் எய்திடீர். ஆறு வித்தை ஓர்கிலீர், அறிவிலாத மாந்தரே? பாரும் இத்தை உம்முளே, பரப்பிரம்மம் ஆனதே!.

சிவவாக்கியம் பாடல் 87 – என்னவென்று சொல்லுவேன்

87. என்னவென்று சொல்லுவேன் இலக்கணம், இல்லாததை! பன்னுகின்ற செந்தமிழ் பதம் கடந்த பண்பென, மின்னகத்தில் மின் ஒடுங்கி மின்னதான வாருபோல். என்னகத்தில் ஈசனும், யானும் அல்லதில்லையே !

சிவவாக்கியம் பாடல் 86 – அவ் எனும்

86. அவ் எனும் எழுத்தினால், அகண்டம் ஏழும் ஆகினாய். உவ் எனும் எழுத்தினால், உருத்தரித்து நின்றனை. மவ் எனும் எழுத்தினால், மயங்கினார்கள் வையகம். அவ்வும், உவ்வும், மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே!

சிவவாக்கியம் பாடல் 86 – மந்திரங்கள் உண்டு நீர்

86. மந்திரங்கள் உண்டு நீர், மயங்குகின்ற மானிடர். மந்திரங்கள் ஆவது, மரத்தில் ஊரல் அன்று காண். மந்திரங்கள் ஆவது, மதத்தெழுந்து வாயுவை, மந்திரத்தை உண்டவர்க்கு, மரணம் ஏதும் இல்லையே!.

சிவவாக்கியம் பாடல் 85 – உடம்பு உயிர்

85. உடம்பு உயிர் எடுத்ததோ? உயிர் உடம்பு எடுத்ததோ? உடம்பு உயிர் எடுத்த போது, உருவம் ஏது செப்புவீர்? உடம்பு உயிர் இறந்த போது, உயிர் இறப்பது இல்லையே! உடம்பு மெய் மறந்து கண்டு உணர்ந்த ஞானம் ஓதுமே!

சிவவாக்கியம் பாடல் 84 – தில்லையை வணங்கி

84. தில்லையை வணங்கி நின்று , தெண்டனிட்ட வாயுவை ! எல்லையை கடந்து நின்ற ஏகபோக மாய்கையும், தெல்லையை கடந்து நின்ற சொர்க்க லோக வெளியிலே! வெள்ளையும் சிவப்புமாகி, மெய் கலந்து நின்றதே!.

சிவவாக்கியம் பாடல் 83 – நெஞ்சிலே இருந்திருந்து

83. நெஞ்சிலே இருந்திருந்து, நெறிங்கி ஓடு வாயுவை, அன்பினால் இருந்து நீர் அருகிருத்த வல்லீரேல், அன்பர் கோயில் காணலாம், அகன்று மென் இசைக்குளே , தும்மி ஓடி ஓடியே, சொல்லடா சுவாமியே!.

சிவவாக்கியம் பாடல் 82 – இறைவனால் எடுத்த மாட

82 . இறைவனால் எடுத்த மாட, தில்லை அம்பலத்திலே! அறிவினால் அடுத்த காயம் அஞ்சினால் அமர்ந்ததே! கருவில் நாதம் மூண்டு போய், சுழன்று வாசல் ஒன்பதும், ஒருவராய், ஒருவர் கோடி உள்ளுலே அமர்ந்ததே!

சிவவாக்கியம் பாடல் 81 – சோதி ஆதி

81. சோதி ஆதி ஆகி நின்ற , சுத்தமும் பலித்து வந்து, போதியாத போதகத்தை, ஓதுகின்ற பூரணா ! வீதியாக ஓடிவந்து , விண்ணடியின் ஊடுபோய், ஆதிநாத நாதன் என்ற அனந்த காலம் உள்ளதே!

சிவவாக்கியம் பாடல் 80 – பருகி ஓடி

80. பருகி ஓடி உம்முளே, பறந்து வந்த வெளிதனை, நிறுவியே நினைத்துப் பார்க்கில், நின் மலம் அதாகுமே! உருகி ஓடி எங்குமாய் உதயசோதி தன்னுளே, கருதடா உனக்கு நல்ல காரணம் அதாகுமே.

சிவவாக்கியம் பாடல் 79 – பாடுகின்ற தும்பருக்கன்

79. பாடுகின்ற தும்பருக்கன் அங்கநாங்கென்னெழுக்கியே, பழுதிலாத கண்ம கூட்டம், இட்ட எங்கள் பரமனே! வீடு செம்பொன் அம்பலத்தில், ஆடு கொண்ட அப்பனே! நீல கண்ட, கால கண்ட, நித்ய கல்யானனே.!.