சிவவாக்கியம் பாடல் 102 – ஒளியதான காசி
102. ஒளியதான காசி மீது வந்து தங்குவோர்க் கெல்லாம், வெளியதான சோதி மேனி, விசுவநாதனானவன். தெளியு கங்கை (மங்கை) உடனிருந்து செப்புகின்ற தாரகம், வெளிய தோரி ராம ராம ராமமிர்த நாமமே!.
சிவவாக்கியம் பாடல் 101 – பச்சை மண்
101. பச்சை மண் பதுப்பிலே, புழ பதித்த வேட்டுவன், நித்தமும் நினைத்திட , நினைந்த வண்ணம் ஆகிடும், பச்சை மண் இடிந்து போய், பறந்த தும்பி ஆயிடும். பித்தர் கால் அறிந்து கொள்க , பிராண் இருந்த கோலமே!.
சிவவாக்கியம் பாடல் 100 – பரம் உனக்கு
100. பரம் உனக்கு , எனக்கு வேறு பயமிலை பரா பரா ! கரம் எடுத்து நிற்றலும், குவித்திடக் கடவதும், சிரம் உறுக்கி அழுதளித்து சீருளாவும் நாதனே, வரம் (உறம்) எனக்கு நீ அளித்த ஓம் நமசிவாயமே!
சிவவாக்கியம் பாடல் 99 – நமசிவாய அஞ்செழுத்தும்
99. நமசிவாய அஞ்செழுத்தும், நிற்குமே நிலைகளும், நமசிவாய அஞ்சும் அஞ்சும், புராணமான மாய்கையும், நமசிவாய மஞ்செழுத்தும் , நம்முளே இருக்கவே! நமசிவாய உண்மையை, நன்கு உரை செய் நாதனே.
சிவவாக்கியம் பாடல் 98 – பேசுவானும் ஈசனே
98. பேசுவானும் ஈசனே, பிரம்ம ஞானம் உம்முளே! ஆசையான ஐவரும், அலைந்து அலைகள் செய்கிறார், ஆசையான ஐவரை அடக்கி ஓர் எழுத்திளே, பேசிடாது இருப்பரேல் நாதம் வந்து ஒலிக்குமே!.
சிவவாக்கியம் பாடல் 97 – வட்டம் என்று
97. வட்டம் என்று உம்முளே மயக்கி விட்டது இவ்வெளி, அட்டரக் கரத்துளே, அடக்கமும், ஒடுக்கமும், எட்டும் எட்டும் எட்டுமாய், இயங்கு சக்கரத்துளே, எட்டலாம் உதித்த எம்பிரானை நாமறிந்த பின்.
சிவவாக்கியம் பாடல் 95 – சோருகின்ற பூதம்
95. சோருகின்ற பூதம் போல், சுணங்கு போல் கிடந்த தீ , நாறுகின்ற கும்பியின் நவின்றெழுந்த , மூடரே! சீறுகின்ற ஐவரை சினக்கருக்க வல்லீரேல், ஆறு கோடி மேனியார் , ஆறில் ஒன்றில் ஆவரே!.
சிவவாக்கியம் பாடல் 94 – மூன்று மூன்று மூன்றுமே
94. மூன்று மூன்று மூன்றுமே, மூவர் தேவர் தேடிடும், மூன்றும், அஞ்சு எழுத்துமாய், முழங்கு மவ் எழுத்துலே! ஈன்ற தாயும் அப்பனும் , இயங்குகின்ற நாதமும், தோன்றும் மண்டலத்திலே , சொல்ல வெங்கும் தில்லையே!.
சிவவாக்கியம் பாடல் 93 – மூன்று மண்டலத்திலும்
93. மூன்று மண்டலத்திலும், முட்டி நின்ற தூணிலும், நான்ற பாம்பின் வாயிலும், நவின்றெழுந்த அக்சரம். ஈன்ற தாயும் அப்பனும், எடுத்துரைத்த மந்திரம். தோன்றும் ஓர் எழுத்துலே, சொல்ல எங்கும் இல்லையே!..
சிவவாக்கியம் பாடல் 92 – கடலிலே திரியும்
92. கடலிலே திரியும் ஆமை, கரையிலேறி முட்டையிட்டு, கடலிலே திரிந்த போது, ரூபமான வாறு போல். மடலுலே இருக்கும் எங்கள் மணியரங்க சோதியை, உடலுலே நினைந்து நல்ல உண்மையான துண்மையே!.
சிவவாக்கியம் பாடல் 91 – இரண்டும் ஒன்று
91. இரண்டும் ஒன்று மூலமாய் , இயங்கு சக்கரத்துள்ளே! சுருண்டு மூன்று வளையமாய், சுணங்கு போல் கிடந்த தீ. முரண்டு எழுந்து சங்கின் ஓசை மூல நாடி ஊடு போய், அரங்கன் பட்டணத்துளே அமர்ந்ததே சிவாயமே!.
சிவவாக்கியம் பாடல் 90 – நவ் இரண்டு
90. நவ் இரண்டு காலதாய், நவின்ற மவ் வயிற தாய். சிவ் இரண்டு தோளதாய், சிறந்த வவ் வாய தாய், யவ் இரண்டு , கண் ணதாய். எழுந்து நின்ற நேர்மையில். செவ்வை ஒத்து நின்றதே சிவாயம் அஞ்செழுத்துமே!.