சிவவாக்கியம் பாடல் 93 – மூன்று மண்டலத்திலும்
93. மூன்று மண்டலத்திலும், முட்டி நின்ற தூணிலும், நான்ற பாம்பின் வாயிலும், நவின்றெழுந்த அக்சரம். ஈன்ற தாயும் அப்பனும், எடுத்துரைத்த மந்திரம். தோன்றும் ஓர் எழுத்துலே, சொல்ல எங்கும் இல்லையே!..
சிவவாக்கியம் பாடல் 92 – கடலிலே திரியும்
92. கடலிலே திரியும் ஆமை, கரையிலேறி முட்டையிட்டு, கடலிலே திரிந்த போது, ரூபமான வாறு போல். மடலுலே இருக்கும் எங்கள் மணியரங்க சோதியை, உடலுலே நினைந்து நல்ல உண்மையான துண்மையே!.
சிவவாக்கியம் பாடல் 91 – இரண்டும் ஒன்று
91. இரண்டும் ஒன்று மூலமாய் , இயங்கு சக்கரத்துள்ளே! சுருண்டு மூன்று வளையமாய், சுணங்கு போல் கிடந்த தீ. முரண்டு எழுந்து சங்கின் ஓசை மூல நாடி ஊடு போய், அரங்கன் பட்டணத்துளே அமர்ந்ததே சிவாயமே!.
சிவவாக்கியம் பாடல் 90 – நவ் இரண்டு
90. நவ் இரண்டு காலதாய், நவின்ற மவ் வயிற தாய். சிவ் இரண்டு தோளதாய், சிறந்த வவ் வாய தாய், யவ் இரண்டு , கண் ணதாய். எழுந்து நின்ற நேர்மையில். செவ்வை ஒத்து நின்றதே சிவாயம் அஞ்செழுத்துமே!.
சிவவாக்கியம் பாடல் 89 – அவ்வுதித்த மந்திரம்
89. அவ்வுதித்த மந்திரம் மகாரமாய், உகாரமாய். எவ்வெழுத்து அறிந்தவர்க்கு , எழு பிறப்பு தீங்கில்லை ? சவ்வுதித்த மந்திரத்தை, தற்பரத்தில் இருத்தினால். அவ்வும், உவ்வும், மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே!.
சிவவாக்கியம் பாடல் 88 – ஆல வித்தில்
88. ஆல வித்தில் ஆல் ஒடுங்கி , ஆலமான வாறு போல். வேறு வித்தும் இன்றியே, விளைந்து போகம் எய்திடீர். ஆறு வித்தை ஓர்கிலீர், அறிவிலாத மாந்தரே? பாரும் இத்தை உம்முளே, பரப்பிரம்மம் ஆனதே!.
சிவவாக்கியம் பாடல் 87 – என்னவென்று சொல்லுவேன்
87. என்னவென்று சொல்லுவேன் இலக்கணம், இல்லாததை! பன்னுகின்ற செந்தமிழ் பதம் கடந்த பண்பென, மின்னகத்தில் மின் ஒடுங்கி மின்னதான வாருபோல். என்னகத்தில் ஈசனும், யானும் அல்லதில்லையே !
சிவவாக்கியம் பாடல் 86 – அவ் எனும்
86. அவ் எனும் எழுத்தினால், அகண்டம் ஏழும் ஆகினாய். உவ் எனும் எழுத்தினால், உருத்தரித்து நின்றனை. மவ் எனும் எழுத்தினால், மயங்கினார்கள் வையகம். அவ்வும், உவ்வும், மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே!
சிவவாக்கியம் பாடல் 86 – மந்திரங்கள் உண்டு நீர்
86. மந்திரங்கள் உண்டு நீர், மயங்குகின்ற மானிடர். மந்திரங்கள் ஆவது, மரத்தில் ஊரல் அன்று காண். மந்திரங்கள் ஆவது, மதத்தெழுந்து வாயுவை, மந்திரத்தை உண்டவர்க்கு, மரணம் ஏதும் இல்லையே!.
சிவவாக்கியம் பாடல் 85 – உடம்பு உயிர்
85. உடம்பு உயிர் எடுத்ததோ? உயிர் உடம்பு எடுத்ததோ? உடம்பு உயிர் எடுத்த போது, உருவம் ஏது செப்புவீர்? உடம்பு உயிர் இறந்த போது, உயிர் இறப்பது இல்லையே! உடம்பு மெய் மறந்து கண்டு உணர்ந்த ஞானம் ஓதுமே!
சிவவாக்கியம் பாடல் 84 – தில்லையை வணங்கி
84. தில்லையை வணங்கி நின்று , தெண்டனிட்ட வாயுவை ! எல்லையை கடந்து நின்ற ஏகபோக மாய்கையும், தெல்லையை கடந்து நின்ற சொர்க்க லோக வெளியிலே! வெள்ளையும் சிவப்புமாகி, மெய் கலந்து நின்றதே!.
சிவவாக்கியம் பாடல் 83 – நெஞ்சிலே இருந்திருந்து
83. நெஞ்சிலே இருந்திருந்து, நெறிங்கி ஓடு வாயுவை, அன்பினால் இருந்து நீர் அருகிருத்த வல்லீரேல், அன்பர் கோயில் காணலாம், அகன்று மென் இசைக்குளே , தும்மி ஓடி ஓடியே, சொல்லடா சுவாமியே!.