சிவவாக்கியம் பாடல் 125 – வேதம் நாலு
125. வேதம் நாலு பூதமாய், விரவும் அங்கி நீரதாய், பாதமேயிலிங்கமாய், பரிந்து பூசை பண்ணினால், காதில் நின்று கடை திறந்து கட்டறுத்த ஞானிகள். ஆதி அந்தமும் கடந்த அரிய வீடதாகுமே…
சிவவாக்கியம் பாடல் 124 – சாவதான தத்துவம்
124. சாவதான தத்துவம், சடங்கு செய்யும் ஊமைகாள். தேவர் கல்லும் ஆவரோ? சிரிப்பதன்றி என் செய்வேன்?. மூவராலும் அறியொனாத முக்கண்ணன் முதல் கொழுந்து, காவலாக உம்முள்ளே கலந்து இருப்பன் காணுமே !
சிவவாக்கியம் பாடல் 123 – பருத்தி நூல்
123. பருத்தி நூல் முறுக்கி இட்டு, பஞ்சி ஓதும் மாந்தரே? துருத்தி நூல் முறுக்கி இட்டு துன்பம் நீங்க வில்வீரேல்!. கருத்தி நூல் கலைபடும், கால நூல் கழிந்திடும், திருத்தி நூல் காவரும் சிவாய அஞ்செழுத்துமே!
சிவவாக்கியம் பாடல் 122 – ஏக போகமாகியே
122. ஏக போகமாகியே, இருவரும் ஒருவராய், போகமும் புனர்ச்சியும், பொருந்துமாற தெங்கனே! ஆகலும், அழிதலும், அதன் கனேயதானபின், சாதலும், பிறக்கலும் இல்லை இல்லை இல்லையே!
சிவவாக்கியம் பாடல் 121 – இருக்கலாம் இருக்கலாம்
121. இருக்கலாம் இருக்கலாம், அவனிலே இருக்கலாம். அரிக்குமால் பிரம்மனுடன், அகண்டம் ஏழ் அகற்றலாம், கருக்கொழாத குழியிலே, கால் இல்லாத கண்ணிலே, திருப்பறை திறந்த பின்பு , நீயும் நானும் ஈசனே.
சிவவாக்கியம் பாடல் 120 – மின் எழுந்து
120. மின் எழுந்து, மின் பரந்து, மின் ஒடுங்கும் வாறு போல் , என்னுள் நின்ற என்னுள் ஈசன், என்னுளே அடங்குமே! கண்ணுள் நின்ற கண்ணின் நேர்மை, கண் அறிவிலாமையால், என்னுள் நின்ற என்னை அன்றி யான் அறிந்ததில்லையே!
சிவவாக்கியம் பாடல் 119 – மூலமான மூசசத்தில்
119. மூலமான மூசசத்தில் , மூசசறிந்து விட்ட பின். நாலு நாளும் உன்னில் ஒரு நாட்டமாக நாட்டிடில், பாலனாகி நீடலாம், பரப்பிரம்மம் ஆகலாம். ஆலம் உண்ட கண்டர் ஆனை அம்மை ஆனை உண்மையே!.
சிவவாக்கியம் பாடல் 118 – விண் கடந்து
118. விண் கடந்து நின்ற சோதி, மேலை வாசலைத் திறந்து. கண் களிக்க உள்ளுலே, கலந்து புக்கிருந்த பின். மண் பிறந்த மாயமும், மயக்கமும் மறந்து போய். எண் கலந்த ஈசனோடு இசைந்து இருப்பது உண்மையே!
சிவவாக்கியம் பாடல் 117 – விண்ணில் உள்ள
117. விண்ணில் உள்ள தேவர்கள் அறியொனாத மெய்ப்பொருள். கண்ணில் ஆணி ஆகவே கலந்து நின்ற எம்பிரான். மண்ணிலாம் பிறப்பறுத்து, மலரடிகள் வைத்த பின், அன்னலாரும் எம்முளே அமர்ந்து வாழ்வது உண்மையே !
சிவவாக்கியம் பாடல் 116 – நெட்டெழுத்து வட்டமோ?
116. நெட்டெழுத்து வட்டமோ? நிறைந்த பல்லி யோனியும். நெட்டெழத்தில் வட்டம் ஒன்று, நின்றதொன்று கண்டிலேன். குட்டெழத்தில் உற்றதென்று , கொம்பு கால் குறித்திடில், நெட்டெழத்தின் வட்டம் ஒன்றில் நேர் படான் நம் ஈசனே.
சிவவாக்கியம் பாடல் 115 – உயிர் நன்மையால்
115. உயிர் நன்மையால், உடல் எடுத்து வந்து இருந்திடும். உயிர் உடம்பு ஒழிந்த போது, ரூபம் ரூபம் ஆயிடும். உயிர் சிவத்தின் மாய்கை ஆகி, ஒன்றை ஒன்றை கொன்றிடும். உயிரும் சக்தி மாய்கை ஆகி ஒன்றை ஒன்று தின்னுமே !
உச்சம் நீசம் என்றால் என்ன?
உச்சம் என்பது சூரியன் உச்சிக்கு வருவது. நீசம் என்றால் தூரமாக இருப்பது. இவை இரண்டும் வீட்டிற்கு உரியது. அதாவது முதல் கட்டத்திற்கு அது மேசமாக இருந்தாலும் மீனமாக இருந்தாலும் முதல் கட்டத்தில் உச்சம் சூரியன் நீசம் சனி தான். இரண்டாம் கட்டத்…