Sidhariyal
வலைப்பதிவு
சிவவாக்கியம் பாடல் 136 – எட்டு மண்டலத்துலே!

136. எட்டு மண்டலத்துலே ! இரண்டு மண்டலம் வளைத்து, இட்ட மண்டலத்திலே எண்ணி ஆறு மண்டலம். தொட்ட மண்டலத்திலே தோன்றி மூன்று மண்டலம். நட்ட மண்டபத்திலே நாதன் ஆடி நின்றதே!

கர்ப்போட்ட காலம் குறிப்பு

6/12/2022 செவ்வாய் கிழமை மார்கழி – 14 அன்று காலை 6 மணியிலிருந்து சூரியன் , அனுசம் நல் சித்திரத்திலிருந்து கேட்டை நல் சித்திரத்தில் நுழைகிறது. செவ்வாய் கிழமை காலை 6 மணியிலிருந்து கர்ப்போட்ட காலம் ஆரம்பம். அன்றிலிருந்து 14 நாட்கள்…

சிவவாக்கியம் பாடல் 135 – காலை மாலை

135. காலை மாலை நம்மிலே கலந்து நின்ற காலனார். மாலை காலையாய்ச் சிவந்த மாயமேது ? செப்பிடீர். காலை மாலை அற்று நீர் கருத்திலே ஒடுங்கினால். காலை மாலை ஆகி நின்ற காலன் இல்லை இல்லையே!

சிவவாக்கியம் பாடல் 134 – நூறு கோடி

134. நூறு கோடி ஆகமங்கள் , நூறு கோடி மந்திரம். நூறு கோடி நாளிருந்து , ஒதினாலும் என் பயன் ? ஆறும் ஆறும் ஆறுமாய் , அகத்தில் ஓர் எழுத்துமாய், ஏறுசீர் எழுத்தை ஓத , ஈசன் வந்து பேசுமே!.

சிவவாக்கியம் பாடல் 133 – சித்தர் ஓதும்

133. சித்தர் ஓதும் வேதமும், சிறந்த ஆகமங்களும், நட்ட காரணங்களும், நவின்ற மெய்மை நூல்களும், கட்டி வைத்த போதகம் , கதைக்குகந்த வித்தெலாம். பெட்டதாய் முடிந்ததே பிரானை யான் அறிந்த பின்.

சிவவாக்கியம் பாடல் 132 – வேனும் வேனும்

132. வேனும் வேனும் என்று நீர், வீண் உழன்று தேடுவீர், வேனும் என்று தேடினாலும் உன்னதல்லதில்லையே! வேணும் என்று தேடுகின்ற வேட்கையைத் துறந்த பின், வேனுமென்ற அப்பொருள் விரைந்து காணலாகுமே!

சிவவாக்கியம் பாடல் 131 – தூமை அற்று

131. தூமை அற்று நின்றல்லோ , சுதீபம் உற்று நின்றது. தான்மை அற்று, வாண்மை அற்று , சஞ்சலங்கள் அற்று நின்ற ! ஆண்மை அற்று நின்றலோ? வழக்கமற்று நின்றது. தூமை தூமை அற்ற காலம், சொல்லும் அற்று நின்றதே!.

சிவவாக்கியம் பாடல் 130 – மாதம் மாதம்

130. மாதம் மாதம் தூமைதான், மறந்து போன தூமைதான், மாத மற்று நின்றலோ? வளர்ந்து ரூபமானது. நாதம் ஏது?, வேதம் ஏது? நற்குலங்கள் ஏதடா? வேதம் ஓதும் வேதியர், விளைந்தவாறும் பேசடா?

சிவவாக்கியம் பாடல் 129 – சத்தம் வந்த

129. சத்தம் வந்த வெளியிலே, சலம் இருந்து வந்ததும், சுத்தமாக நீரிலே துவண்டு மூழ்கும் மூடரே! சுத்தமேது?, கெட்ட தேது?, தூய்மை கண்டு நின்ற தேது ? பித்த காயம் உற்ற தேது? பேதம் ஏது? போதமே!

சிவவாக்கியம் பாடல் 128 – அறை அறை

128. அறை அறை இடை கிடந்த அன்று தூமை என்கிறீர். முறையறிந்து பிறந்த போதும் அன்று தூமை என்கிறீர். துறையறிந்து நீர் குளித்தால் அன்று தூமை என்கிறீர். முறையிலாத நீசரோடு பொருந்துமாறு தெங்கனே ?

சிவவாக்கியம் பாடல் 127 – எங்கள் தேவர்

127. எங்கள் தேவர், உங்கள் தேவர் என்றிரண்டு தேவரோ? அங்கும் இங்கும் ஆகி நின்ற ஆதிமூர்த்தி ஒன்றல்லோ? அங்கும் இங்கும் ஆகி நின்ற ஆதி மூர்த்தி ஒன்றெனில், பங்கவாரம் சொன்ன பேர்கள் வாய் புழுத்து மாள்வரே!

சிவவாக்கியம் பாடல் 126 – காலை மாலை

126 . காலை மாலை நீரிலே முழுகும் அந்த மூடர்காள், காலை மாலை நீரிலே கிடந்த தேரை என் பெறும். காலமே எழுந்திருந்து, கண்கள் மூன்றில் ஒன்றினால், மூலமே நினைந்தீராகில் மொத்த சித்தி ஆகுமே!.