சிவவாக்கியம் பாடல் 129 – சத்தம் வந்த
129. சத்தம் வந்த வெளியிலே, சலம் இருந்து வந்ததும், சுத்தமாக நீரிலே துவண்டு மூழ்கும் மூடரே! சுத்தமேது?, கெட்ட தேது?, தூய்மை கண்டு நின்ற தேது ? பித்த காயம் உற்ற தேது? பேதம் ஏது? போதமே!
சிவவாக்கியம் பாடல் 128 – அறை அறை
128. அறை அறை இடை கிடந்த அன்று தூமை என்கிறீர். முறையறிந்து பிறந்த போதும் அன்று தூமை என்கிறீர். துறையறிந்து நீர் குளித்தால் அன்று தூமை என்கிறீர். முறையிலாத நீசரோடு பொருந்துமாறு தெங்கனே ?
சிவவாக்கியம் பாடல் 127 – எங்கள் தேவர்
127. எங்கள் தேவர், உங்கள் தேவர் என்றிரண்டு தேவரோ? அங்கும் இங்கும் ஆகி நின்ற ஆதிமூர்த்தி ஒன்றல்லோ? அங்கும் இங்கும் ஆகி நின்ற ஆதி மூர்த்தி ஒன்றெனில், பங்கவாரம் சொன்ன பேர்கள் வாய் புழுத்து மாள்வரே!
சிவவாக்கியம் பாடல் 126 – காலை மாலை
126 . காலை மாலை நீரிலே முழுகும் அந்த மூடர்காள், காலை மாலை நீரிலே கிடந்த தேரை என் பெறும். காலமே எழுந்திருந்து, கண்கள் மூன்றில் ஒன்றினால், மூலமே நினைந்தீராகில் மொத்த சித்தி ஆகுமே!.
சிவவாக்கியம் பாடல் 125 – வேதம் நாலு
125. வேதம் நாலு பூதமாய், விரவும் அங்கி நீரதாய், பாதமேயிலிங்கமாய், பரிந்து பூசை பண்ணினால், காதில் நின்று கடை திறந்து கட்டறுத்த ஞானிகள். ஆதி அந்தமும் கடந்த அரிய வீடதாகுமே…
சிவவாக்கியம் பாடல் 124 – சாவதான தத்துவம்
124. சாவதான தத்துவம், சடங்கு செய்யும் ஊமைகாள். தேவர் கல்லும் ஆவரோ? சிரிப்பதன்றி என் செய்வேன்?. மூவராலும் அறியொனாத முக்கண்ணன் முதல் கொழுந்து, காவலாக உம்முள்ளே கலந்து இருப்பன் காணுமே !
சிவவாக்கியம் பாடல் 123 – பருத்தி நூல்
123. பருத்தி நூல் முறுக்கி இட்டு, பஞ்சி ஓதும் மாந்தரே? துருத்தி நூல் முறுக்கி இட்டு துன்பம் நீங்க வில்வீரேல்!. கருத்தி நூல் கலைபடும், கால நூல் கழிந்திடும், திருத்தி நூல் காவரும் சிவாய அஞ்செழுத்துமே!
சிவவாக்கியம் பாடல் 122 – ஏக போகமாகியே
122. ஏக போகமாகியே, இருவரும் ஒருவராய், போகமும் புனர்ச்சியும், பொருந்துமாற தெங்கனே! ஆகலும், அழிதலும், அதன் கனேயதானபின், சாதலும், பிறக்கலும் இல்லை இல்லை இல்லையே!
சிவவாக்கியம் பாடல் 121 – இருக்கலாம் இருக்கலாம்
121. இருக்கலாம் இருக்கலாம், அவனிலே இருக்கலாம். அரிக்குமால் பிரம்மனுடன், அகண்டம் ஏழ் அகற்றலாம், கருக்கொழாத குழியிலே, கால் இல்லாத கண்ணிலே, திருப்பறை திறந்த பின்பு , நீயும் நானும் ஈசனே.
சிவவாக்கியம் பாடல் 120 – மின் எழுந்து
120. மின் எழுந்து, மின் பரந்து, மின் ஒடுங்கும் வாறு போல் , என்னுள் நின்ற என்னுள் ஈசன், என்னுளே அடங்குமே! கண்ணுள் நின்ற கண்ணின் நேர்மை, கண் அறிவிலாமையால், என்னுள் நின்ற என்னை அன்றி யான் அறிந்ததில்லையே!
சிவவாக்கியம் பாடல் 119 – மூலமான மூசசத்தில்
119. மூலமான மூசசத்தில் , மூசசறிந்து விட்ட பின். நாலு நாளும் உன்னில் ஒரு நாட்டமாக நாட்டிடில், பாலனாகி நீடலாம், பரப்பிரம்மம் ஆகலாம். ஆலம் உண்ட கண்டர் ஆனை அம்மை ஆனை உண்மையே!.
சிவவாக்கியம் பாடல் 118 – விண் கடந்து
118. விண் கடந்து நின்ற சோதி, மேலை வாசலைத் திறந்து. கண் களிக்க உள்ளுலே, கலந்து புக்கிருந்த பின். மண் பிறந்த மாயமும், மயக்கமும் மறந்து போய். எண் கலந்த ஈசனோடு இசைந்து இருப்பது உண்மையே!