Sidhariyal
வலைப்பதிவு
சிவவாக்கியம் பாடல் 141 – புலால் புலால்

141. புலால் புலால் புலால தென்று பேதமைகள் பேசுறீர். புலாலை விட்டு எம்பிரான் பிரிந்திருந்த தெங்ஙனே? புலாலுமாய் பிதற்றுமாய் பேருளாவும் தானுமாய், புலாலிலே முளைத்தெழுந்த பித்தன் கானும் அத்தனே!.

சிவவாக்கியம் பாடல் 139 – உருத்தரிப்பதற்கு முன்

139. உருத்தரிப்பதற்கு முன் உடன் கலந்ததெங்கனே? கருத்தரிப்பதற்கு முன் காரணங்கள் எங்கனே? பொருத்தி வைத்த போதமும் பொருந்துமாறு தெங்கனே? குருத் துருத்தி வைத்த சொல் குறித்துனர்ந்து கொள்ளுமே !

சிவவாக்கியம் பாடல் 138 – அம்மை அப்பன்

138. அம்மை அப்பன் அப்பு நீ அறிந்ததே அறிகிலீர். அம்மை அப்பன் அப்பு நீ அரி அயன் அரனுமாய், அம்மை அப்பன் அப்பு நீ ஆதி ஆதி ஆன பின். அம்மை அப்பன் நின்னை அன்றி யாருமில்லை ஆனதே.

சிவவாக்கியம் பாடல் 137 – நாலிரண்டு மண்டலத்துள்

137. நாலிரண்டு மண்டலத்துள், நாதன் நின்றது எவ்விடம்? காலிரண்டு மூல நாடி கண்டதிங்கு ருத்திரன். சேர் இரண்டு கண் கலந்து , திசைகள் எட்டும் மூடியே. மேலிரண்டு தான் கலந்து வீசியாடி நின்றதே !

சிவவாக்கியம் பாடல் 136 – எட்டு மண்டலத்துலே!

136. எட்டு மண்டலத்துலே ! இரண்டு மண்டலம் வளைத்து, இட்ட மண்டலத்திலே எண்ணி ஆறு மண்டலம். தொட்ட மண்டலத்திலே தோன்றி மூன்று மண்டலம். நட்ட மண்டபத்திலே நாதன் ஆடி நின்றதே!

கர்ப்போட்ட காலம் குறிப்பு

6/12/2022 செவ்வாய் கிழமை மார்கழி – 14 அன்று காலை 6 மணியிலிருந்து சூரியன் , அனுசம் நல் சித்திரத்திலிருந்து கேட்டை நல் சித்திரத்தில் நுழைகிறது. செவ்வாய் கிழமை காலை 6 மணியிலிருந்து கர்ப்போட்ட காலம் ஆரம்பம். அன்றிலிருந்து 14 நாட்கள்…

சிவவாக்கியம் பாடல் 135 – காலை மாலை

135. காலை மாலை நம்மிலே கலந்து நின்ற காலனார். மாலை காலையாய்ச் சிவந்த மாயமேது ? செப்பிடீர். காலை மாலை அற்று நீர் கருத்திலே ஒடுங்கினால். காலை மாலை ஆகி நின்ற காலன் இல்லை இல்லையே!

சிவவாக்கியம் பாடல் 134 – நூறு கோடி

134. நூறு கோடி ஆகமங்கள் , நூறு கோடி மந்திரம். நூறு கோடி நாளிருந்து , ஒதினாலும் என் பயன் ? ஆறும் ஆறும் ஆறுமாய் , அகத்தில் ஓர் எழுத்துமாய், ஏறுசீர் எழுத்தை ஓத , ஈசன் வந்து பேசுமே!.

சிவவாக்கியம் பாடல் 133 – சித்தர் ஓதும்

133. சித்தர் ஓதும் வேதமும், சிறந்த ஆகமங்களும், நட்ட காரணங்களும், நவின்ற மெய்மை நூல்களும், கட்டி வைத்த போதகம் , கதைக்குகந்த வித்தெலாம். பெட்டதாய் முடிந்ததே பிரானை யான் அறிந்த பின்.

சிவவாக்கியம் பாடல் 132 – வேனும் வேனும்

132. வேனும் வேனும் என்று நீர், வீண் உழன்று தேடுவீர், வேனும் என்று தேடினாலும் உன்னதல்லதில்லையே! வேணும் என்று தேடுகின்ற வேட்கையைத் துறந்த பின், வேனுமென்ற அப்பொருள் விரைந்து காணலாகுமே!

சிவவாக்கியம் பாடல் 131 – தூமை அற்று

131. தூமை அற்று நின்றல்லோ , சுதீபம் உற்று நின்றது. தான்மை அற்று, வாண்மை அற்று , சஞ்சலங்கள் அற்று நின்ற ! ஆண்மை அற்று நின்றலோ? வழக்கமற்று நின்றது. தூமை தூமை அற்ற காலம், சொல்லும் அற்று நின்றதே!.

சிவவாக்கியம் பாடல் 130 – மாதம் மாதம்

130. மாதம் மாதம் தூமைதான், மறந்து போன தூமைதான், மாத மற்று நின்றலோ? வளர்ந்து ரூபமானது. நாதம் ஏது?, வேதம் ஏது? நற்குலங்கள் ஏதடா? வேதம் ஓதும் வேதியர், விளைந்தவாறும் பேசடா?