சிவவாக்கியம் பாடல் 24 – அஞ்செழுத்திலே பிறந்து
24. அஞ்செழுத்திலே பிறந்து, அஞ்செழுத்திலே வளாந்து, அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்ச பூத பாவிகாள். அஞ்செழுத்தில் ஒரெழுத்து அறிந்து கூற வல்லீரேல்! அஞ்சல், அஞ்சல் என்று நாதன் அம்பலத்தில் ஆடுமே.
சிவவாக்கியம் பாடல் 23 – தங்கம் ஒன்று
23. தங்கம் ஒன்று, ரூபம் வேறு, தன்மையானவாறு போல். செங்கண், மாலும் ஈசனும் , சிறந்து இருந்தது எம்முள்ளே ! பிங்களங்கள் பேசுவார், பிணங்குகின்ற மாந்தரே! எங்குமாகி நின்ற நாமம், நாமம், இந்த நாமமே !
சிவவாக்கியம் பாடல் 22 – சங்கு இரண்டு
22. சங்கு இரண்டு, தாரை ஒன்று, சன்ன பின்னல் ஆகையால், மங்கி மாளும் தேய் உலகில் மனிடங்கள் எத்தனை?. சங்கிரண்டையும், தவிர்ந்து, தாரை ஊத வல்லீரேல் ! கொங்கை, மங்கை, பங்கரோடு கூடி வாழலாகுமே!.
சிவவாக்கியம் பாடல் 21 – சாமம், நாலு
21. சாமம், நாலு வேதமும், சகல சாத்திரங்களும், சேமமாக ஓதினும், சிவனை நீர் அறிகிலீர். காமநோயை விட்டு நீர், கருத்துளே உணர்ந்த பின், ஊனமற்ற காயமாய் இருப்பன் , எங்கள் ஈசனே!.
சிவவாக்கியம் பாடல் 20 – அண்டவாசல் ஆயிரம்
அண்டவாசல் ஆயிரம், பிரசண்ட வாசல் ஆயிரம். ஆறிரண்டு நூறு கோடி , ஆன வாசல் ஆயிரம், இந்த வாசல் ஏழை வாசல், ஏக போகமான வாசல். எம்பிரான் இருக்கும் வாசல், யாவர் கான வல்லீரோ?.
சிவவாக்கியம் பாடல் 19 – அஞ்சு மூணு
அஞ்சு மூணு எட்டதாம், அனாதியான மந்திரம். நெஞ்சிலே நினைந்து கொண்டு, நீர் உரக்கச் செப்பிரல், பஞ்சமான பாதகங்கள், நூறு கோடி செய்யினும் ! பஞ்சு போல் பறக்குமென்று, நான் மறைகள் பண்ணுமே!
சிவவாக்கியம் பாடல் 18 – வித்தில்லாத சம்பிரதாயம்
வித்தில்லாத சம்பிரதாயம் , மேலும் இல்லை , கீழம் இல்லை. தச்சில்லாத மாளிகை, சமைந்தவாறு எங்கனே? பெற்ற தாயை, விற்று அடிமை, கொள்ளுகின்ற பேதைகாள் ! சித்தில்லாத போது சீவன் , இல்லை இல்லை இல்லையே!.
சிவவாக்கியம் பாடல் 17 – நாலுவேதம் ஓதுவீர்
நாலுவேதம் ஓதுவீர், ஞானபாதம் அறிகிலீர் பாலுள்நெய் கலந்தவாறு பாவிகாள், அறிகிலீர்! ஆலம்உண்ட கண்டனார் அகத்துளே இருக்கவே காலன்என்று சொல்லுவீர், கனவிலும் அஃதில்லையே.
சிவவாக்கியம் பாடல் 16 – தூரம், தூரம்
தூரம், தூரம், தூரம் என்று சொல்லுவார்கள், சோம்பர்கள். பாரும் விண்ணும் எங்குமாய்ப் பரந்த அப் பராபரம். ஊரு நாடு காடு தேடி உழன்று தேடும், ஊமைகாள்! நேரதாக உம்முளே அறிந்து உணர்ந்து கொள்ளுமே !
சிவவாக்கியம் பாடல் 14 – சாத்திரங்கள், ஓதுகின்ற
சாத்திரங்கள், ஓதுகின்ற சட்டநாத பட்டரே? வேர்த்து இறைப்பு வந்த போது, வேதம் வந்து உதவுமோ? மாத்திரை போதும் உள்ளே அறிந்து நோக்க வல்லிரேல், சாத்திரப்பை நோய்களேது? சக்தி, முத்தி , சித்தியே ?
சிவவாக்கியம் பாடல் 13 – நானதேது நீயதேது
நானதேது, நீயதேது, நடுவில் நின்றது ஏதடா? கோனதேது, குருவதேது, கூறிடும் குலாமரே? ஆனதேது அழிவது ஏது , அப்புறத்தில் அப்பரம். ஈனதேது , ராம, ராம ,ராமம் என்ற நாமமே!
சிவவாக்கியம் பாடல் 12 – கதாவு பஞ்ச
கதாவு பஞ்ச பாதகங்களைத் துரந்த மந்திரம், இதாம், இதாம் அதல்லவென்று, வைத்துழலும் ஏழைகாள். சதா விடாமல் ஓதுவார், தமக்கு நல்ல மந்திரம். இதாம், இதாம் ராம ராம ராமம் என்னும் நாமமே?