சிவவாக்கியம் பாடல் 11 – அந்தி, மாலை
அந்தி, மாலை, உச்சி, மூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும், சந்தி தர்ப்பணங்களும், தபங்களும், செபங்களும், சிந்தை மேவு ஞானமும், தினம் செபிக்கும் மந்திரம், எந்தை ராம, ராம, ராம, ராம, ராமம் என்னும் நாமமே !
சிவவாக்கியம் பாடல் 10 – மண்ணும் நீ
10.மண்ணும் நீ விண்ணும் நீ மறிகடல்கள் ஏழும் நீ எண்ணும் நீ எழுத்தும் நீ இசைத்த பண் எழுத்தும் நீ கண்ணும் நீ மணியும் நீ கண்ணுளாடும் பாவை நீ நண்ணும் நீர்மை நின்ற பாதம் நண்ணுமாறு அருளிடாய்
சிவவாக்கியம் பாடல் 9 – நினைப்பதொன்று கண்டிலேன்
9.நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை, நினைப்புமாய் மறப்புமாய் நின்றமாயை மாயையோ? அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய் எனக்குள்நீ உனக்குள்நான் இருக்குமாற தெங்ஙனே.
சிவவாக்கியம் பாடல் 8 – என்னிலே இருந்தஒன்றை
8.என்னிலே இருந்தஒன்றை யான்அறிந்தது இல்லையே என்னிலே இருந்தஒன்றை யான்அறிந்து கொண்டபின் என்னிலே இருந்தஒன்றை யாவர்காண வல்லரோ? என்னிலே இருந்திருந்து யான்உணர்ந்து கொண்டனே.
சிவவாக்கியம் பாடல் 7 – வடிவுகண்டு கொண்டபெண்ணை
7.வடிவுகண்டு கொண்டபெண்ணை மற்றொருவன் நத்தினால் விடுவனோ அவனைமுன்னம் வெட்டவேணும் என்பனே நடுவன்வந்து அழைத்தபோது நாறும்இந்த நல்லுடல் சுடலைமட்டும் கொண்டுபோய்த் தோட்டிகைக் கொடுப்பாரே.
சிவவாக்கியம் பாடல் 6 – உருத்தரித்த நாடியில்
6. உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக் கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்றவல்லீரேல் விருத்தரரும் பாலராவீர் மேனியும் சிவந்திடும் அருள்தரித்த நாதர்பாதம் அம்மைபாதம் உண்மையே.
சிவவாக்கியம் பாடல் 5 – ஓடிஓடி ஓடிஓடி
5.ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த சோதியை நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்துபோய் வாடிவாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள் கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே.
நில பயிற்சி மையம் கலைநிலம் இணைந்து துடும்பாட்டம், கோவை வடவள்ளியில் அம்மன் கோயிலில்
நில பயிற்சி மையம் கலைநிலம் இணைந்து துடும்பாட்டம், கோவை வடவள்ளியில் அம்மன் கோயிலில்
திருக்குறளின் 133 அதிகாரங்கள்
திருக்குறளின் 133 அதிகாரங்கள் என்பது 133 ஆண்டுகளுக்கு ஒரு முறை வட துருவத்தின் தலை ஆட்டம் எனும் நிகழ்வு நடப்பதை குறிப்பது. இது சக்தி மையத்தின் பின் சுழற்சியால் ஏற்படுவது. வட துருவம் கிழக்கு மேற்காக தலையாட்டுவது போல் சுழலும். …
சிவவாக்கியம் பாடல் 283 – கொள்ளொணாது மெல்ளொணாது
283. கொள்ளொணாது மெல்ளொணாது, கூதறக் குதட்டொணா? தள்ளொனாத , அணுகொனாத தாதலான். மனத்துள்ளே ! தெள்ளொணாது தெளியொணாது சிற்பரத்தின் உட்பயன், வெல்லொணாத பொருளை நான் விளம்புமாற தெங்கனே!
திருக்குறளின் 133 அதிகாரங்கள் என்பது ஆண்டு கணக்கு
திருக்குறளின் 133 அதிகாரங்கள் என்பது ஆண்டு கணக்கு தான். 133.33 x 360 திதிகள் = 48,000 திதிகள். நம்முடைய 120 தசா ஆண்டுகள் எனும் கணக்கில் ஒரு தசா ஆண்டிற்கு 400 திதிகள். அல்லது 388.8 நாட்கள். 120 x 400 திதிகள் = 48000 தி…
நிலாவின் ஓட்டத்தை புரிந்து கொள்வது என்பது விண்ணியலின் அடிப்படை.
நிலாவின் ஓட்டத்தை புரிந்து கொள்வது என்பது விண்ணியலின் அடிப்படை. நிலா தினமும் 12 திகிரி நகர்கிறது. அப்படி அது 12 திகிரி தினமும் நகர்ந்தால அது 30 நாட்களில் 360 திகிரி ஒரு முழு வட்டத்தை கடந்து இருக்க வேண்டும். ஆனால் அது 360…