Sidhariyal

ஆறிய தேனீரும் ஆறாத மனமும்!!! (செசெகு)

Posted on பிப்ரவரி 9, 2026

ஆறிய தேனீரும் ஆறாத மனமும்!!! ??? மழை கேட்டு வான் பார்த்து நான் நிற்க மரம் கேட்டு மண் பார்த்து வான் நின்றது மரம் அறுத்து கதவு செய்து காத்து வர திறந்து வைத்து கண்கள் பூக்க காத்திருந்தேன் வாராத காத்துமே இல்லாத சன்னலை தீராத கோபத்தால் முகமறைந்து சாத்துதே சரி… தேனீர் குடித்து கொண்டே காற்றும் வாராதா மழையும் வாராதா என்றெண்ணி மழைமேகம் நான்தேட முகத்திலே ஒரு துளி பட்டென்று… சட்டென்று மழையனெ நான் நிமிர்ந்து பாக்கையிலே குனிந்த வானம் தணிந்த குரலில் காதருகே கனிவாய் சொன்னது… மலை தாண்டி போகும் மடமேகம் செஞ்ச காரியம், உன் கன்னத்தில் வழிவது மழையல்ல எச்சில் உன் கிண்ணத்தில் தளும்புவது தேனீர் அல்ல மழை! குவளை தேனீர் போதுமென்று மலைகாட்ட வெட்டிப்புட்டே முலையறுத்து பால் குடித்து முகம் சிவந்து மழை கேட்டே! முகம் துடைப்பாய் தோழா இதுவும் கடந்து போகும்! செசெகு…