Sidhariyal

சுத்தாத சூரியனை நடுவே வைத்து, (செசெகு)

Posted on பிப்ரவரி 9, 2026

சுத்தாத சூரியனை நடுவே வைத்து, நவகோளும் கும்மி அடிக்குதாம், வாக்கும் கணிதமும் பஞ்சமாகி, பஞ்சாங்கம் ஆனதாம். கணியர்களும் அவர்தம் சந்ததியும் இங்கு பணியர்கள் ஆகி வான் பார்த்து வாழ்ந்த சந்ததி ஆற்றலை துறந்து, அருமையை மறந்து சிறு தொழிலாய் அருளை அடகு வைத்து பிரபஞ்ச ஞானத்தை மானிடர் மண முடிக்க, பிணம் எடுக்க, கல் அடுக்க எ‌ன்று நாள் குறிப்பதை சிறுமை எ‌ன்று அறியாமல் சிறப்பு எ‌ன்று எண்ணி கையில் எடுத்ததை வைக்க முடியாமல் வளர்த்து எடுத்தாரே !