Sidhariyal

காலை விண் நோக்காமல் (செசெகு)

Posted on பிப்ரவரி 9, 2026

காலை விண் நோக்காமல் பாலை மண் அகழ்ந்து இன்னும் ஆடு மலை ஏறியதை அறியாமல் இறுமாந்து மீன் ஏறி பாலை வந்தால் நீந்திதான் கரை ஏறுமோ… எனை ஆளும் மாமத கூட்டம்?! கண் கொண்டு கோளை காணாமல் கணி பார்த்து செருக்குடனே விண் ஆராய கோளை அனுப்பி கோலுடன் இன்னும் ஆடு நோக்கும் அறிவிழந்த அறிவியலார் என் அறிவிழக்க ஊசி ஏற்றி எனை ஆள கனவு கண்டு ஏமாறும் நாள் தொலைவில் அல்ல