சிவவாக்கியம் பாடல் 38 – இருக்க நாலு
38. இருக்க நாலு வேதமும், எழுத்தை அற ஓதினும்!
பெருக்க நீறு பூசினும், பிதற்றினும், பிரான் இரான்,
உருக்கி நெஞ்சை, உட்கலந்து, உண்மை கூற வல்லீரேல்?
சுருக்கமற்ற சோதியை, தொடர்ந்து கூடலாகுமே.
சிவவாக்கியம் பாடல் 37 – பூசை பூசை
37. பூசை பூசை என்று நீர், பூசை செய்யும் பேதைகாள்,
பூசை உள்ள. தன்னிலே, பூசை கொண்டது எவ்விடம்?
ஆதி பூசை கொண்டதோ? அனாதி பூசை கொண்டதோ?
ஏது பூசை கொண்டதோ? , இன்னதென்று இயம்புமே?
சிவவாக்கியம் பாடல் 36 – கோயிலாவது ஏதடா?
36. கோயிலாவது ஏதடா? குளங்கலாவது ஏதடா?
கோயிலும், குளங்களும், கும்பிடும் குலாமரே!
கோயிலும் மனத்துள்ளே, குளங்களும் மனத்துள்ளே,
ஆவதும், அழிவதும் இல்லை இல்லை இல்லையே!.
சிவவாக்கியம் பாடல் 35 – மாறுபட்டு மணி
35. மாறுபட்டு மணி துலக்கி, வண்டின் எச்சில் கொண்டு போய்,
ஊறுபட்ட கல்லின் மீதே, ஊற்றுகின்ற , மூடரே,
மாறுபட்ட தேவரும், அறிந்து நோக்கும் என்னையும்,
கூறுபட்டு, தீர்க்கவோ, குருக்கள் பாதம் வைத்ததே!.
சிவவாக்கியம் பாடல் 34 – செய்ய தெங்கிலே
34. செய்ய தெங்கிலே இளநீர், சேர்ந்த காரணங்கள் போல்,
ஐயன் வந்து என் உளம், புகுந்து கோயில் கொண்டனன்.
ஐயன் வந்து என் உளம், புகுந்து கோயில், கொண்ட பின்,
வையகத்தில் , மாந்தர் முன்னம் வாய் திறப்பதில்லையே!
சிவவாக்கியம் பாடல் 33 – வாட்டில்லாத பரமனை
33. வாட்டில்லாத பரமனை , பரம லோக நாதனை!
நாட்டிலாத நாதனை, நாரி பங்கர் பாகனை!
கூட்டி மெல்ல வாய்புதைத்து, குனு குனுத்த மந்திரம்!
வேட்டக்கார குசுகுசுப்பை கூப்பிடாமு நின்றதே!.
சிவவாக்கியம் பாடல் 32 – நெருப்பை மூட்டி
32. நெருப்பை மூட்டி, நெய்யை விட்டு நித்தம் நித்தம் நீரிலே
விருப்படுமாடு நீர் குளிக்கும், வேதவாக்யம் கேளுமின்.
நெருப்பும், நீரும் உம்முளே, நினைத்துக் கூற வல்லிரேல்?
சுருக்கமற்ற சோதியை, தொடர்ந்து கூடலாகுமே!
சிவவாக்கியம் பாடல் 31 – அண்டர் கோன்
31. அண்டர் கோன், இருப்பிடம், அறிந்து உணர்ந்த ஞானிகள்.
பண்டறிந்த பான்மை தன்னை , யார் அறிய வல்லரோ?
விண்ட வேத பொருளையன்றி, வேறு கூற வகையில்லா?
கண்ட கோயில் தெய்வமென்று , கை எடுப்பதில்லையே!,
சிவவாக்கியம் பாடல் 30 – பண்டு நான்
30. பண்டு நான் பறித்தெறிந்த, பண் மலர்கள். எத்தனை?
பாழிலே செபித்துவிட்ட , மந்திரங்கள் எத்தனை?
பிண்டனாய் திரிந்த போது, இறைத்த நீர்கள் எத்தனை?
மீளவும் சிவாலயங்கள் , சூழ வந்தது எத்தனை?
சிவவாக்கியம் பாடல் 29 – அண்ணலே அனாதியே
29. அண்ணலே அனாதியே, அனாதி முன் அனாதியே!
பெண்ணும், ஆணும் ஒன்றலோ, பிறப்பதற்கு முன்னெலாம்.
கண்ணில் ஆணின் சுக்கிலம், கருவில் ஓங்கும் நாளிலே!
மண்ணுலோரும், விண்ணுலோரும், வந்தவாற தெங்கனே.?
சிவவாக்கியம் பாடல் 28 – ஓடமுள்ள போதெல்லாம்
ஓடமுள்ள போதெல்லாம், ஓடியே உலாவலாம்.
ஓடமுள்ள போதெல்லாம் உறுதி பண்ணிக் கொள்ளலாம்.
ஓடம் உடைந்த போது , ஒப்பில்லாத நாளிலே !
ஆடுமில்லை கோளுமில்லை , யாருமில்லை ஆனதே!
சிவவாக்கியம் பாடல் 27 – வீடெடுத்து வேள்வி
வீடெடுத்து வேள்வி செய்து மெய்யரோடு , பொய்யுமாய்,
மாடு, மக்கள், பெண்டிர், சுற்றம், என்றிருக்கும், மாந்தர்காள்.
நாடு பெற்ற நடுவர் கையில் ஓலை வந்து அழைத்திடில்,
ஓடு பெற்றது அவ்விலை, பெறாது காணும் உடலமே!