சிவவாக்கியம் பாடல் 26 – நீள வீடு
26. நீள வீடு கட்டுவீர், நெடுங்கதவு சாத்துவீர்,
வாழ வேண்டும் என்றலோ, மகிழ்ந்திருந்த மாந்தரே!
காலன் ஓலை வந்தபோது , கை கலந்து நின்றிடும்.
ஆலம் உண்ட கண்டர் பாதம், அம்மை பாதம் , உண்மையே.
சிவவாக்கியம் பாடல் 25 – அஞ்சும், அஞ்சும்
25. அஞ்சும், அஞ்சும், அஞ்சுமே, அனாதியானது அஞ்சுமே!
பிஞ்சு பிஞ்சதல்லவோ, பித்தர்காள், பிதற்றுவீர்.
நெஞ்சில் அஞ்சு கொண்டு நீர், நின்று தெரக்க வல்லீரேல்!
அஞ்சும் இல்லை ஆறும் இல்லை அனாதியாகத் தோன்றுமே!
சிவவாக்கியம் பாடல் 24 – அஞ்செழுத்திலே பிறந்து
24. அஞ்செழுத்திலே பிறந்து, அஞ்செழுத்திலே வளாந்து,
அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்ச பூத பாவிகாள்.
அஞ்செழுத்தில் ஒரெழுத்து அறிந்து கூற வல்லீரேல்!
அஞ்சல், அஞ்சல் என்று நாதன் அம்பலத்தில் ஆடுமே.
சிவவாக்கியம் பாடல் 23 – தங்கம் ஒன்று
23. தங்கம் ஒன்று, ரூபம் வேறு, தன்மையானவாறு போல்.
செங்கண், மாலும் ஈசனும் , சிறந்து இருந்தது எம்முள்ளே !
பிங்களங்கள் பேசுவார், பிணங்குகின்ற மாந்தரே!
எங்குமாகி நின்ற நாமம், நாமம், இந்த நாமமே !
சிவவாக்கியம் பாடல் 22 – சங்கு இரண்டு
22. சங்கு இரண்டு, தாரை ஒன்று, சன்ன பின்னல் ஆகையால்,
மங்கி மாளும் தேய் உலகில் மனிடங்கள் எத்தனை?.
சங்கிரண்டையும், தவிர்ந்து, தாரை ஊத வல்லீரேல் !
கொங்கை, மங்கை, பங்கரோடு கூடி வாழலாகுமே!.
சிவவாக்கியம் பாடல் 21 – சாமம், நாலு
21. சாமம், நாலு வேதமும், சகல சாத்திரங்களும்,
சேமமாக ஓதினும், சிவனை நீர் அறிகிலீர்.
காமநோயை விட்டு நீர், கருத்துளே உணர்ந்த பின்,
ஊனமற்ற காயமாய் இருப்பன் , எங்கள் ஈசனே!.
சிவவாக்கியம் பாடல் 20 – அண்டவாசல் ஆயிரம்
அண்டவாசல் ஆயிரம், பிரசண்ட வாசல் ஆயிரம்.
ஆறிரண்டு நூறு கோடி , ஆன வாசல் ஆயிரம்,
இந்த வாசல் ஏழை வாசல், ஏக போகமான வாசல்.
எம்பிரான் இருக்கும் வாசல், யாவர் கான வல்லீரோ?.
சிவவாக்கியம் பாடல் 19 – அஞ்சு மூணு
அஞ்சு மூணு எட்டதாம், அனாதியான மந்திரம்.
நெஞ்சிலே நினைந்து கொண்டு, நீர் உரக்கச் செப்பிரல்,
பஞ்சமான பாதகங்கள், நூறு கோடி செய்யினும் !
பஞ்சு போல் பறக்குமென்று, நான் மறைகள் பண்ணுமே!
சிவவாக்கியம் பாடல் 18 – வித்தில்லாத சம்பிரதாயம்
வித்தில்லாத சம்பிரதாயம் , மேலும் இல்லை , கீழம் இல்லை.
தச்சில்லாத மாளிகை, சமைந்தவாறு எங்கனே?
பெற்ற தாயை, விற்று அடிமை, கொள்ளுகின்ற பேதைகாள் !
சித்தில்லாத போது சீவன் , இல்லை இல்லை இல்லையே!.
சிவவாக்கியம் பாடல் 17 – நாலுவேதம் ஓதுவீர்
நாலுவேதம் ஓதுவீர், ஞானபாதம் அறிகிலீர்
பாலுள்நெய் கலந்தவாறு பாவிகாள், அறிகிலீர்!
ஆலம்உண்ட கண்டனார் அகத்துளே இருக்கவே
காலன்என்று சொல்லுவீர், கனவிலும் அஃதில்லையே.
சிவவாக்கியம் பாடல் 16 – தூரம், தூரம்
தூரம், தூரம், தூரம் என்று சொல்லுவார்கள், சோம்பர்கள்.
பாரும் விண்ணும் எங்குமாய்ப் பரந்த அப் பராபரம்.
ஊரு நாடு காடு தேடி உழன்று தேடும், ஊமைகாள்!
நேரதாக உம்முளே அறிந்து உணர்ந்து கொள்ளுமே !
சிவவாக்கியம் பாடல் 14 – சாத்திரங்கள், ஓதுகின்ற
சாத்திரங்கள், ஓதுகின்ற சட்டநாத பட்டரே?
வேர்த்து இறைப்பு வந்த போது, வேதம் வந்து உதவுமோ?
மாத்திரை போதும் உள்ளே அறிந்து நோக்க வல்லிரேல்,
சாத்திரப்பை நோய்களேது? சக்தி, முத்தி , சித்தியே ?