Sidhariyal
வலைப்பதிவு
திருக்கார்த்திகை தீப திருநாள்
இன்று சித்தர்கள் உருவாக்கிய விண்ணியல் கணிதப்படி வான்பார்த்து கிரகங்களின் உண்மையான இருப்பைக்கொண்டு கணிக்கப்பட்ட சித்தரியல் கணிதப்படி *திருக்கார்த்திகை தீப திருநாள் ஆகும்*
சிவவாக்கியம் பாடல் 174 – ஒன்றும் ஒன்று
174. ஒன்றும் ஒன்று ஒன்றுமே உலகனைத்தும் ஒன்றுமே! அன்றும் இன்றும் ஒன்றுமே! அனாதியானது ஒன்றுமே! கண்றள் நின்ற செம்பொன்னை களிம்பறுத்து நாட்டினால், அன்று தெய்வம் உம்முளே அறிந்ததே சிவாயமே…
சிவவாக்கியம் பாடல் 173 – முத்தனாய் நினைந்தபோது
173. முத்தனாய் நினைந்தபோது முடிந்த அண்ட உச்சிமேல், அர்த்தநாரும் அம்மையும் பரிந்து பாடல் ஆடினார். சித்தரான ஞானிகாள் தில்லை ஆடல் என்பீர்காள். அர்த்த நாடலுற்ற போது அடங்கலாடல் உற்றதே.
சிவவாக்கியம் பாடல் 172 – நானிருந்து மூல
172. நானிருந்து மூல வங்கி தணழெழுப்பி வாயுவால், தேனிருந்து வறை திறந்து சித்தி ஒன்றும் ஒத்ததே. வானிருந்த மதியில் மூன்று மண்டலம் புகுந்த பின், கூட இருந்து களவு கண்ட யோகி நல்ல யோகியே!.
சிவவாக்கியம் பாடல் 171 – திரும்பி ஆடு
171. திரும்பி ஆடு வாசலெட்டு , திறம் உறைத்த வாசல் எட்டு. மருங்கிலாத கோலம் எட்டு, வன்னி ஆடு வாசல் எட்டு. துரும்பில்லாத கோலம் எட்டு , சுற்றி வந்த மறுவரே. அரும்பிலாத பூவும் உண்டு ஐயன் ஆனை உண்மையே!
சிவவாக்கியம் பாடல் 170 – உதிக்கும் என்ற
170. உதிக்கும் என்ற தெவ்விடம் ? ஒடுங்குகின்ற தெவ்விடம்? கதிக்கு நின்ற தெவ்விடம் ? கண்ணுறக்கம் எவ்விடம் ? மதிக்க நின்ற தெவ்விடம் ? மதிமயக்கம் yஎவ்விடம்? விதிக்க வல்ல ஞானிகாள் விரித்துரைக்க வேணுமே!
முருகனின் இந்த சட்டி விரதத்திற்கு விளக்கும்
காற்று ஓட்டத்தையும், திசை மாறுவதையும் கவனித்தவர்களுக்குத் தெரியும் இப்பொழுது கற்று அடிக்காமல் தீபம் வைத்தால் நின்று எரியும். முருகனின் இந்த சட்டி விரதத்திற்கு விளக்கு வைத்தால் அனையாமல் எரியும்.( வீட்டில் Fan இருப்பவர்களுக்கும் இது தெ…
சிவவாக்கியம் பாடல் 168 – உவமையில்லா பேரொளிக்கு
168. உவமையில்லா பேரொளிக்கு உருவுமானது எவ்விடம் ? உவமையாகி அண்டத்துள் உருவி நின்ற தெவ்விடம்? தவமதான பரமனார் தரித்து நின்ற தெவ்விடம் ? தற்பரத்தில் சலம் பிறந்து தங்கி நின்ற தெவ்விடம் ?
சிவவாக்கியம் பாடல் 167 – அங்கலிங்க பீடமாய்
167. அங்கலிங்க பீடமாய், ஐயிரண்டு எழுத்திலும், பொங்கு தாமரையினும் பொருந்துவார் அகத்தினும், பங்கு கொண்ட சோதியும், பரந்த அஞ்செழுத்துமே சங்கு நாத ஓசையும், சிவாயம் அல்லதில்லையே!.
சிவவாக்கியம் பாடல் 166 – கோசமாய் எழுந்ததும்

166. கோசமாய் எழுந்ததும், கூடுறுவி நின்றதும், தேகமாய் பிறந்ததும், சிவாய அஞ்செழுத்துமே! ஈசனார் இருந்திடம், அநேக அநேக மந்திரம். ஆசனம் நிறைந்து நின்ற 51 எழுத்துமே.

எப்படி நிலா, ஒரு ஒழுங்கில் பூமியை சுற்றி வலம் வருகிறதோ

எப்படி நிலா, ஒரு ஒழுங்கில் பூமியை சுற்றி வலம் வருகிறதோ , அது போல் சூரியனைச் சுற்றி பூமி ஒரு ஒழங்கில் வலம் வருகிறது . நிலாவும் பூமியும் ஒரே திசையில் சூரியனைச் சுற்றி வலம் வருகின்றது. 360 திகிரி வானத்தை , நிலா 27 நாளிலும்…

தமிழ் இறை மொழி

மின்சாரம் உருவாக்க நமக்கு ஒரு காந்த புலத்தில், உலோக கம்பியை இயக்கினால் மின்சாரம் உருவாவது போல். இங்கே இயக்கம் இருக்கிறது, உலோகம் இருக்கிறது ‘வெப்பம் இருக்கிறது. அதனால் காந்த புலம் உருவாகி இருக்கிறது. நிலாவிலும் காந்த புலம் இருக்க…