Sidhariyal
வலைப்பதிவு
சிவவாக்கியம் பாடல் 278 – வண்டுலங்கு போலு

278. வண்டுலங்கு போலு நீர் மனத்து மாசு அறுக்கிலீர். குண்டலங்கள் போலு நீர் குளத்திலே முழுகிறீர். பண்டும் உங்கள் நான்முகன் பறந்து தேடி காண்கிலான். கண்டிருக்கும் உம்முளே கலந்திருப்பர் காணுமே !

சிவவாக்கியம் பாடல் 277 – முச்சதுரம் மூலமாகி

277. முச்சதுரம் மூலமாகி முடிவுமாகி ஏகமாய். அச்சதுரம் ஆகியே அடங்கி ஓர் எழுத்துமாய். மெய்ச்சதுரம் மெய்யுளே விளங்கு ஞான தீபமாய். உச்சரிக்கும் மந்திரத்தின் உண்மையே சிவாயமே!

1/7 மழை

இன்று மாலை 5.00 மணியிலிருந்து தூறல் தொடர்ந்து முக்கால் மணி நேரமாக பெய்கிறது. இது சித்திரை மாதத்தில் மழைக்கு உண்டான ஓட்டம்.

சிவவாக்கியம் பாடல் 276 – மூலமான அக்கரம்

276. மூலமான அக்கரம் முகப்பதற்கு முன்னெலாம், மூலமாக மூடுகின்ற மூடமேது மூடரே! காலனான அஞ்சு பூதம் அஞ்சிலே ஓடுங்கினால், ஆதியோடு. கூடுமோ!? அனாதியோடு கூடுமோ?

ஆடி – 9 June – 29. கற்போட்டம்
நேற்று பகல் முழுவதும் மேக மூட்டத்துடன் இருந்து இரவில் தெளிந்த வானம் காணப்பட்டது. தற்போது தெளிந்த வானத்துடன் நல்ல வெய்யில் அடிக்கிறது. கர்போட்ட காலத்தின் இச்சூழல் வரும் மாசி மாத கடைசியும் பங்குனி மாதத்திலும் வெய்யில் நல்ல வெய்யில் அடிக்க…
2025 ம் ஆண்டின் தை மாத முதல் ஆனி மாத வரை கோடை மழை கணிப்புக்கான கர்போட்டம் காணுதல்:

2025 ம் ஆண்டின் தை மாத முதல் ஆனி மாத வரை கோடை மழை கணிப்புக்கான கர்போட்டம் காணுதல்:

தென் செலவு தொடங்கும் நாள்
இன்று ஆனி 31, சூரியனின் வட செலவு முடியும் நாள். நாளை ஆடி 1, தென் செலவு தொடங்கும் நாள்
சிவவாக்கியம் பாடல் 275 – அணுவினோடும் அண்டமாய்

275. அணுவினோடும் அண்டமாய், அளவிடாத சோதியை! குணமதாகி உம்முளே, குறித்திருக்கில் முக்தியாம். முனு முனென்று உம்முளே! விரலை ஊன்றி மீளவும், தினம் தினம் மயக்குவீர் செம்பு பூசை பண்ணியே !

குறிப்பெடுத்து மழைபொழிவை கணிக்கலாம்.
அடுத்த ஆண்டின் 6 மாத கோடை மழையை தீர்மானிக்கும் கர்போட்டம் ஆடி 4 ம் தேதி (ஜூன் 24, 2024) தொடங்க உள்ளது. ஆடி 4 ம் தேதியிலிருந்து ஆடி 18 ம் தேதிவரை கர்போட்டம் நடைபெறும் காலம். இந்த 14 நாட்களின் வானிலையை கவனித்து குறிப்பெடுத்தால் 6…
சிவவாக்கியம் பாடல் 274 – பத்தொடற்ற வாசலில்

274. பத்தொடற்ற வாசலில் பரந்து மூல அக்கரம், முத்தி சித்தி, சொந்தமின்றி இயக்குகின்ற மூலமே! மத்த சித்த ஐம்புலன் மகாரமான கூத்தையே!. அத் தீ ஊற தம்முளே அமைந்ததே! சிவாயமே !

சிவவாக்கியம் பாடல் 273 – நீரிலே பிறந்திருந்து

273. நீரிலே பிறந்திருந்து நீர் சடங்கு செய்கிறீர்! யாரை உண்ணி நீரெலாம் அவத்திலே இறைக்கிறீர்? வேரை உண்ணி வித்தை உண்ணி வித்திலே முலைத்தெழும், சீரை உண்ண வல்லீரேல் சிவபதம் அடைவீரே!

சிவவாக்கியம் பாடல் 272 – கயத்து நீர்

272. கயத்து நீர் இறைக்கிறீர் , கைகள் சோர்ந்து நிற்பதேன்? மனத்துளீர் ஒன்றிலாத மதியிலாத மாந்தர்காள், மனத்துள ஈறம் கொண்டு நீர் அழுக்கருக்க வல்லீரேல் ! நினைப் பிரிந்த சோதியும், நீயும் நானும் ஒன்றலோ!