Sidhariyal

வெள்ளிக் கிழமை நவம்பர் 15. 2024. கார்த்திகை 24. (திருவிழா)

Posted on பிப்ரவரி 6, 2026

வெள்ளிக் கிழமை நவம்பர் 15. 2024. கார்த்திகை 24. திருக்கார்த்திகை தீபத் திருநாள். வெள்ளிக் கிழமை மாலை நேரம் , வீட்டிற்கு முன்புறம் தீபம் வைத்து, தென்மேற்கு பருவக் காற்று வடகிழக்கு பருவகாற்றாக மாறுவதை தீபம் வைத்து , சுடர் அசைவதை வைத்து சுலபமாக புரிந்து கொள்ள முடியும். காற்று திரும்பவில்லை என்றால், சுடர் ஆடாமல் அசையாமல் நின்றால், தினமும் வைக்க வேண்டும். நான்கு, ஐந்து நாட்களில் காற்று திரும்பி விடும். சுடர் அனைந்து விடும். இதைப் பார்க்கத்தான் வீட்டின் வெளியே தீபம் பற்ற வைப்பது. காற்று திசை மாறுவதை வேளாண் பெருமக்கள் அறிந்து கொள்ளத் தான் இந்த பண்டிகைகள். அதே போல் வடகிழக்கு பருவக் காற்று தென்மேற்காக மாறுவது வைகாசி பௌர்ணமியில். அனைவருக்கும் கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள்.
Related Posts