Feb – 15 , மாசி – 28 – 2026 ஞாயிறு மாலையிலிருந்து Feb – 16 காலை 6 மணி வரை தொடர்ந்து மகாசிவராத்திரி நிகழ்வுகள் வெகு சிறப்பாக முடிந்தது. (திருவிழா)
Posted on மார்ச் 5, 2026
Feb – 15 , மாசி – 28 – 2026 ஞாயிறு மாலையிலிருந்து Feb – 16 காலை 6 மணி வரை தொடர்ந்து மகாசிவராத்திரி நிகழ்வுகள் வெகு சிறப்பாக முடிந்தது.
நிலா பயிற்சி மையத்தின் குழந்தைகளின் தமிழ் பாடலுடன் துவங்கிய ராத்திரி, திரு Healer Basker ஐயாவின் கரங்களால், இந்த வருட சித்தரியில் நாட்காட்டியும், மூன்று விண்ணியலும் வாழ்வியலும் புத்தகங்களும் வெளியிடப்பட்டு, வந்திருந்த 80 பேர்களுக்கு வழங்கப் பட்டது. பின்னர் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை வானில் தெரிந்த ராசிகளையும், நல்சித்திரங்களையும் அவதானித்துக் கொண்டே வந்திருந்த திரு விஜய் இராவண மருத்துவம் அவர்களின் சிறப்பான மருத்துவம் சம்பந்தமான உரை 1.30 மணி நேரம் வியப்பில் ஆழ்த்தியது. மற்றும் நிலா பயிற்சி மாணவர்களின் பறை ஆட்டம் , மற்றும் பறை பற்றிய விளக்கம் திரு சக்தி இராவணன் – கலைநிலம் – உரை – துடும்பு ஆப்பம், அதை பற்றிய விளக்கம் என இரவு சூடுபரக்க வந்திருந்தவர்களுக்கு துடும்பாட்ட அடவுகள் கற்றுத் தந்தார். சிவவாக்கியர் பாடல்களை அனைவரும் இசைக்க , திரு ஜானி கண்ணன் அவர்களின் தியானம் , மற்றும் இரும்பொறை இளங்கோவின் அனுபவம். என கலை கட்டியது. விடிகாலை 6 மணி வரை சுறுசுறுப்பாக கண்விழித்த அனுபவம் நிலா பயிற்சி மாணவர்களுக்கு ஒரு நல் வாய்ப்பு. வந்து இருந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி.