Sidhariyal

சிவவாக்கியம் பாடல் 252 – என் அகத்துள் (சிவவாக்கியம்)

Posted on ஜனவரி 29, 2026

252. என் அகத்துள் என்னை நான் எங்கும் நாடி ஓடினேன். என் அகத்துள் என்னை நான் அறிந்திலாத தன்மையால் என் அகத்துள் என்னை நான் அறிந்துமே தெரிந்த பின், என் அகத்துள் என்னை அன்றி யாதும் ஒன்றும் இல்லையே! என் உடலில் உயிர் எங்கு உள்ளது, அந்த உயிராகிய நான் எங்கு இருக்கிறேன் என தெரிந்து கொள்ள என் அகத்துள் நாடி ஓடி தேடினேன் என்கிறார். என் அகமாகிய உடலின் உள்ளே நான் எப்படி இருப்பேன் என அறிந்திலாத தன்மையால் , தேடிய போது அந்த என்னகத்துள் நான் எப்படி இருக்கிறேன் என்று அறிந்து உணர்ந்து கொண்ட பின். என் அகத்துள் என்னையன்றி யாதும் இல்லை இல்லை இல்லையே என்றால் என் உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களிலும் என்னைப் பற்றிய நாதம் (என்னைப் பற்றிய கருத்து) உறைந்துள்ளது. ஆகவே என் உடலே நான்தான். என்னை அன்றி யாதும் இல்லை என்கிறார்.
Related Posts