Sidhariyal

சிவவாக்கியம் பாடல் 235 – அன்னை கர்ப்ப (சிவவாக்கியம்)

Posted on ஜனவரி 29, 2026

235. அன்னை கர்ப்ப அறை அதற்குள் அங்கியின் பிரகாசமாய், அந்த அறைக்குள் வந்திருந்து , அரிய விந்து ரூபமாய், தன்னை ஒத்து நின்ற போது தடையறுத்து வெளியதாய் . தங்கு எனப் பெருமை தந்து தலைவனாய் வளர்ந்ததே! அன்னை கர்ப்ப அறை அதற்குள் தீ பிழம்பின் வெளிச்சத்துடன் பிரகாசமாய், அந்த கர்ப்பப் பைக்குள், அப்பாவின் விதைப் பையிலிருந்து விந்து ரூபத்தில் வால் வடிவில் நீந்தி வந்த ஏராளமான விந்து ரூபங்களில் , அன்னை கர்ப்பத்தில் கருமுட்டையில் நாதமாக ( information pocket) எதை உள்ளே விட வேண்டும் என தகவல் அடங்கிய அதிர்வு கருமுட்டையில் இருக்கும். அதுதான் நாதம். அதனுடன் எந்த விந்து ரூபம் ஒத்து நின்ற போது அந்த ஒரு ரூபத்தை மட்டும் அந்த கருமுட்டை உள்வாங்கி தடையறுத்து இடை வெளி கொடுத்து உள்வாங்கி இங்கே தங்கி உடலை வளர்த்துக்கொள் என அந்த ரூபத்துக்கு மட்டும் பெருமை தந்து தலைவனாய் வளர்ந்தது என பெரிய அறிவியலை எளிதாக பாடலில் போகிற போக்கில் சொல்கிறார்
Related Posts