Sidhariyal

சிவவாக்கியம் பாடல் 20 – அண்டவாசல் ஆயிரம் (சிவவாக்கியம்)

Posted on நவம்பர் 25, 2025

அண்டவாசல் ஆயிரம், பிரசண்ட வாசல் ஆயிரம். ஆறிரண்டு நூறு கோடி , ஆன வாசல் ஆயிரம், இந்த வாசல் ஏழை வாசல், ஏக போகமான வாசல். எம்பிரான் இருக்கும் வாசல், யாவர் கான வல்லீரோ?. காற்று வந்து செல்லக் கூடியது தான் வாசல். அப்படி அண்டத்தில் உள்ள வாசல் ஆயிரமாயிரம். பிரசண்ட வாசல் ஆயிரம். அதாவது பிரானனான இறைவனைக் கான அண்டத்தில் ஆயிரக்கனக்கான வாசல்களும், மற்றும் கடுமையான வழிகளில், இறைவனைக் கான ஆயிரக்கனக்கான வழி முறைகள் உள்ளன. ஆனால் இந்த வாசல் , சாதாரணமானவர்களும், எளிமையாக இறைவனை, அடைய கூடிய வாசல். அது எது என்றால் எம்பிரான் இருக்கும் வாசல். அதை யார் கண்டு உணர போகிறீர்களோ? இவர் முதல் பாடலிலேயே ஆறிரண்டு நூறு தேவர் அன்றுரைத்த மந்திரம். என கூறியுள்ளார். இந்தப் பாடலில் ஆறிரண்டு நூறு கோடி ஆனவாசல் ஆயிரம் என கூறியுள்ளார். ஆறிரண்டு நூறு என்றால் 6 x 2 x 100 = 1200 பேர் இறைவனைக் கண்டு கொண்ட தேவர்களாகவும். கோடி பேர்களில் ஒருவருக்குத்தான் இது புரியுமோ?.....
Related Posts