Sidhariyal

சிவவாக்கியம் பாடல் 320 – கோடி கோடி (சிவவாக்கியம்)

Posted on பிப்ரவரி 11, 2026

320. கோடி கோடி கோடி கோடி குவலயத்தோர், ஆதியை! நாடி நாடி நாடி நாடி நாள் அகன்று வீணதாய் ! தேடி தேடி தேடி தேடி தேகமும் கசங்கியே! கூடி கூடி கூடி கூடி நிற்பர் கோடி கோடியே! ஆதி, அநாதி இதை புரிந்து கொள்ளத் தான் (குவலயத்தோர் ) கோள வடிவிளான இந்த பேரண்டத்தில் வாழும் மனிதர்கள் அலையாய் அலைகிறார்கள். இந்த மனம், கருத்து, எண்ணம், Information, Soft Ware இவையெல்லாம் அநாதி என்றால் , இந்த கண்ணுக்குத் தெரியும் அனைத்துப் பொருட்களும் (சிவம்) Hardware ஆதியாக இருக்குமோ? என நாடி நாடி இந்த நாட்கள் கடந்து ஒரு முடிவுக்கு வர முடியாமல் வாழ்வை வீணடித்து, மீண்டும் தேடி தேடி அவர்களுடைய உடல் கசங்கி, வீழ்ந்து , கூடி கூடி நின்று அதை விவாதித்து நிற்பர் கோடி கோடியே! என்கிறார் சிவவாக்கியர். ஆதி என்றால் அழிவு உண்டு. அநாதி ( இறைவன்) என்றும் அழிவில்லாதது.
Related Posts