Sidhariyal

சிவவாக்கியம் பாடல் 315 – புவன சக்கரத்துலே (சிவவாக்கியம்)

Posted on பிப்ரவரி 9, 2026

315. புவன சக்கரத்துலே , பூத நாத வெளியிலே! பொங்கு தீப அங்கியுள், பொதித்தெழுந்த வாயுவை ! தவன சோமன் இருவரும், தாம் இயங்கும் வாசலில், தண்டு மாறி ஏறி நின்ற சரசமான வெளியிலே! நம் அண்டம் புவனங்கள் கொண்ட நான்கு கரங்களாக சக்கர வடிவில் இயங்கிக் கொண்டு உள்ளது. வெளி எனும் பூதத்தில் நாதம் அதாவது அண்ட வெடிப்பின் நாதம் நிறைந்து கானப்படும் என்கிறார். நம் பிண்டமும் நாதத்தின் வெளிப்பாடுகளில் நிறைந்து கானப்படும். பொங்கு தீப அங்கியுள் என்பது நம் உடல் எப்பொழுதும் வெப்பம் மாறாது இயக்கத்தில் இருப்பதை சொல்கிறார். அண்டத்திலும், வெப்பம் பரவி இருக்கும். அந்த உடல் எனும் அங்கியுள், பொதித்து எழும் வாயுவை, அதாவது குளிர்ச்சியான உள் செல்லும் வாயுவை சோமன் என்றும், உடலின் உள் சென்று திரும்பும் வாயு (கரியமில ) வெப்பமாக அருக்கன் என்றும் , தவன என்றால் தவம் இருக்கும் நம்மை தவன என்பது வெளி வரும் மூச்சை மெதுவாக நீண்ட மூச்சாக தான் இயங்கும் வாசல் என்பது புருவமத்தியில், தண்டு மாறி ஏறி நின்ற சரசமான வெளியிலே என்றால் சரக்கலை . உள் செல்வது சோமன் வெளி வரும் காற்று அருக்கன் , தவம்மிருப்பவர்களால் மாற்றிக் கொள்ள முடியும்… இப்படி மூச்சை நம் கட்டுப்பாட்டில் மாற்ற முடிந்தால் அந்த சரசமான வெளியை அடைய முடியும் என்கிறார். அதாவது உடலை விட்டு 6 சக்கரங்களைக் கடந்து 7-ம் சக்கரமான சரசமான சகசராரம் அடையளாம் என்கிறார்.
Related Posts