Sidhariyal

சிவவாக்கியம் பாடல் 249 – அண்ணலாவதேதடா? (சிவவாக்கியம்)

Posted on ஜனவரி 29, 2026

249. அண்ணலாவதேதடா? அறிந்துரைத்த மந்திரம். தண்ணலாக வந்தவன் சகல புராணங்கற்றவன், கண்ணனாக வந்தவன் காரணத் துதித்தவன், ஒன்னதாவதேதடா? உண்மையான மந்திரம். அண்ணலாக வந்தவன் அறிந்து உரைத்த மந்திரம் ஓம் நமசிவாய. அண்ணல் என்றால் அனைவரும் ஏற்றுக் கொண்ட , மதிப்பு கொடுக்கக் கூடியவர்தான். அப்படிப்பட்டவர் சிவன். தண்ணலாக வந்தவன் என்றால் , குமரிகண்டம் கடல் பொங்கி மூழ்கப் போவதை முன்பே அறிந்து அனைவரையும் , காவடியுடன் வழிநடத்தியவன் முருகன். அவரைத் தான் சகல புராணங் கற்றவன் என்று கூறுகிறார். கண்ணன் ஆக வந்தவன் பாரத யுத்தம் நடப்பதை அறிந்து இதில் நாம் வென்றாலும் , கலிகாலம் தொடங்கியதை முன் அறிந்து அதை நமக்கு உணர்த்தும் காரணத்துக்காக உதித்தவன் என்கிறார். இப்படி அம் மூவரும் ஒன்றுபடுவது எதில் என்றால் அந்த ஓம் நமசிவாய எனும் மந்திரத்தில் தான் என்கிறார்.
Related Posts